Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒருவாரம் தொடர்ந்து ஒரே பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Water Bottle Danger : வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். மேலும் நாம் செல்லும் இடங்களுக்கு தண்ணீர் எடுத்து செல்ல வாட்டர் பாட்டில் உதவிகரமானதாக இருக்கிறது. ஆனால் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுவது இயல்பு.

ஒருவாரம் தொடர்ந்து ஒரே பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Sep 2025 17:32 PM IST

இன்றைய நவீன காலகட்டத்தில் வாட்டர் பாட்டில்கள் நமக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நம் செல்லும் இடங்களில் எல்லாம் நம்முடன் தண்ணீரை எடுத்து செல்ல முடிகிறது. இதனால் நம் வீட்டு தண்ணீரை (Drinking Water) எடுத்து செல்ல முடியும் என்பதால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் தடுக்க முடியும் என நம்புகிறார்கள். பொதுவாக வாட்டர் பாட்டில் என்றால் பாதுகாப்பானது, குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் கெடாது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த செயலுக்கு மருத்துவ நிபுணர்கள் நம்மை  எச்சரிக்கிறார்கள். நீர் தானாக கெட்டுப்போவதில்லை என்றாலும், பாட்டிலில் நீண்ட நாட்கள் நீரை சேமித்து வைத்திருந்தால் அதில் பாக்டீரியா, பூஞ்சை ஆகியவை உருவாகக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பாட்டில் நீர் ஏன் பாதுகாப்பற்றது?

  • பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை நீண்ட நேரம் குறிப்பாக வெப்பமான இடங்களில் வைத்தால், பிளாஸ்டிக்கில் இருந்து ரசாயனங்கள் நீரில் கலக்கக்கூடும். இது மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படக் கூடும் அபாயம் உண்டு.
  • பாட்டிலில் இருக்கும் சிறிய  அளவு பாக்டீரியாக்கள் சில மணி நேரங்களிலேயே விரைவாக பெருகுகின்றன. பாட்டிலை கழுவாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி போன்ற தொற்று நோய்கள் ஏற்படும்.
  • பாட்டிலை அதிக நாட்கள் முறையாக கழுவாமல் வி்டால் அதில் பூஞ்சை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பூஞ்சை கலந்த நீர் வயிற்றை மட்டுமல்லாமல், அலர்ஜி, வாந்தி போன்ற உடல் நல பிரச்னைகளை உண்டாக்கும். குறிப்பாக குழந்தைகளை இது கடுமையாக பாதிக்கும்.

இதையும் படிக்க :எந்த காலத்தில் எந்த பானையில் தண்ணீர் ஊற்றி குடிக்க வேண்டும்..? இது இவ்வளவு நன்மைகளை தரும்!

ஒரு ஆய்வில், பாட்டிலில் சேமிக்கப்படும் நீரில் பயோஃபிலிம் புரொடியூசிங் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சில பாக்டீரியாக்கள் மருந்து எதிப்பு தன்மையுடன் இருப்பதால், அவற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

எவ்வளவு நேரம் பாட்டிலில் நீர் பாதுகாப்பாக இருக்கும்?

பாட்டிலில் இருக்கும் நீர் குளிர்ச்சியான இடத்தில் வைத்தால் 24 மணி நேரம் வரை பாதுகாப்பாக இருக்கும். அதற்கு பிறகு மாற்ற வேண்டும். கடைகளில் விற்கப்படும் வாட்டர் பாட்டிலை ஒருமுறை திறந்தவுடன் , இரண்டு நாட்களுக்குப் பிறகு பயன்படுத்த வேண்டாம். மேலும் அதன் காலாவதியாகும் தேதியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பாட்டிலில் நீரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வழிகள்

  • பாட்டிலை எப்போதும் குளிரான இடத்தில் வைப்பது நல்லது

  • எரிவாயு, பெட்ரோல், ரசாயனங்கள், நேரடி சூரிய ஒளி அருகில் வைக்கக் கூடாது.

  • பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது மெட்டல் பாட்டில்களை பயன்படுத்துவது நல்லது.

  • பாட்டில்களை தினமும் சூடான நீர் மற்றும் சோப்பால் கழுவி, முழுமையாக உலர்த்தி தான் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

  • பழைய பாட்டில்கள் பாக்டீரியா வளரும் இடமாக மாறுவதால் அவற்றை மாற்ற வேண்டும்.

இதையும் படிக்க : ORS என்றால் என்ன? இது உடலுக்கு உடனடியாக ஆற்றலை எப்படி தருகிறது?

தண்ணீர் கெட்டுப் போவதில்லை என்றாலும், பாட்டிலில் நீண்ட நாட்கள் நீரை சேமித்து வைத்திருப்பதால் அது பாக்டீரியா, ரசாயனங்கள், பூஞ்சை காரணமாக குடிப்பதற்கு ஆபத்தானதாக மாறுகிறது. முடிந்த வரை 24 மணி நேரத்திற்குப் பிறகு பாட்டிலில் உள்ள நீரை மாற்றுங்கள். பிளாஸ்டிக்கைக் குறைத்து, ஸ்டீல் பாட்டில் பயன்படுத்துங்கள். அதுவே உங்கள் உடல்நலனுக்கு பாதுகாப்பான தேர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.