Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Charger Safety Tips: சார்ஜரை இரவு முழுவதும் பிளக்-இன் செய்து விட்டுச் செல்கிறீர்களா? இது இவ்வளவு ஆபத்தா..?

Charger Plugged in Dangers: சார்ஜர் சாக்கெட்டில் இருந்து பலரும் செல்போனை எடுத்த பிறகு, சுவிட்ச் ஆப் செய்வது கிடையாது. சார்ஜர் சாக்கெட்டில் வைத்து சுவிட்ச் ஆன் செய்யப்பட்டிருக்கும் போது மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழக்கம் உங்களது மின்சார கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, உங்களுக்கு மின்சார அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம்.

Charger Safety Tips: சார்ஜரை இரவு முழுவதும் பிளக்-இன் செய்து விட்டுச் செல்கிறீர்களா? இது இவ்வளவு ஆபத்தா..?
சார்ஜ் பிளக் இன் செய்யும் முறைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Oct 2025 17:03 PM IST

பல ஆண்டுகளாக மக்கள் செல்போனுக்கு (Cell Phone) சார்ஜ் போடும் விஷயத்தில் பல தவறுகளை செய்கிறார்கள். பல வகைகளில் செல்போனுக்கு மட்டுமின்றி, நமக்கும் ஆபத்தை விளைவிக்கும். சிலர் இரவு முழுவதும் செல்போனை சார்ஜ் போட்டு தூங்க செல்கிறார்கள். இப்படி, செய்வது மிகவும் ஆபத்தான ஒன்று. இரவு முழுவதும் சார்ஜ் போடுவது செல்போனின் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக, செல்போன் வெடிக்கும் ஆபத்தை அதிகரிக்கும். அதேபோல், பலரும் போனை சார்ஜரிலிருந்து (Mobile Charger) கழற்றி சாக்கெட்டுகளை அப்படியே விட்டுவிடுகிறார்கள். சாக்கெட்டை அணைக்காமல் அப்படியே விட்டுவிடும் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறது என்றால் இந்த செய்தி உங்களுக்கானது.

சார்ஜரை அணைப்பது ஏன் முக்கியம்..?

சார்ஜர் சாக்கெட்டில் இருந்து பலரும் செல்போனை எடுத்த பிறகு, சுவிட்ச் ஆப் செய்வது கிடையாது. சார்ஜர் சாக்கெட்டில் வைத்து சுவிட்ச் ஆன் செய்யப்பட்டிருக்கும் போது மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், சார்ஜ் செய்ய செருகப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், மின்சாரம் இயங்கும். இது மின்சாரத்தை வீணாக்குகிறது. இந்த பழக்கம் உங்களது மின்சார கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, உங்களுக்கு மின்சார அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம்.

ALSO READ: ஸ்மார்ட் டிவியை இப்படி ஸ்மார்ட்டாக யூஸ் பண்ணுங்க.. நீண்ட ஆண்டுகள் செலவு தராமல் சூப்பரா ஓடும்..!

சிலர் தங்களது செல்போனுக்கு அதிவேகமாக சார்ஜ் ஏற வேண்டும் என்பதற்காக அதிக சக்தி கொண்ட சார்ஜர்களை பயன்படுத்துகிறார்கள். இந்த வகை சார்ஜர்கள் உங்களுக்கு மின்சார அதிர்ச்சி ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி, சார்ஜர்கள் அல்லது தொடர்ந்து செருகப்பட்டிருக்கும் பிற சாதனங்கள் வெப்பமடைகின்றன. இது அவற்றில் ஷார்ட் சர்க்யூட்கள் அல்லது வெடிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே, சார்ஜர்களில் இருந்து செல்போனை எடுத்த பிறகு, ஸ்விட்ச் ஆப் செய்யுங்கள். இது சிறிது சிறிதாக மின்சாரத்தை சேமிக்க உதவும். இது உங்கள் செலவையும் குறைக்கும்.

கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:

உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீண்ட நேரம் சார்ஜரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பலர் படுக்கையிலோ அல்லது சோபாவிலோ அமர்ந்திருக்கும்போது கேபிளை இழுத்து இழுத்து மொபைலுக்கு சார்ஜ் போட்டபடி பயன்படுத்துகிறார்கள். இது நல்லதல்ல. மேலும், சார்ஜரை ஒரே நேரத்தில் இழுப்பது கேபிளை உடைத்து சார்ட் சர்க்யூட்க்கு வழிவகுக்கலாம்.

ALSO READ: மழைக்காலத்தில் ஏசி வெப்பநிலை எவ்வளவு வைக்க வேண்டும்..? மின்சார கட்டணத்தைக் குறைக்கும் வழிகள்!

அதேபோல், சார்ஜரை ஒருபோதும் ஈரமான அல்லது நீர் நிறைந்த மேற்பரப்பில் வைக்க வேண்டாம். சார்ஜர் நனைந்தால், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதை நன்கு உலர வைக்கவும். இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு அதை அணைத்து வைப்பது அல்லது இரவு முழுவதும் செல்போனை சார்ஜரில் வைப்பது நல்லதல்ல. இது செல்போனின் ஆயுளைக் குறைக்கும். அப்படி இல்லையென்றால், வெடிப்புகள் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம்.