Clean Switch Plates: வெள்ளை ஸ்விட்ச் போர்டுகளை எப்படி சுத்தம் செய்வது? 5 எளிய வழிகள்!
Clean Dirty Switch Plates: வீட்டு அழகிற்கு முக்கியமான வெள்ளை ஸ்விட்ச் போர்டுகள் காலப்போக்கில் அழுக்கடைந்து மஞ்சள் நிறமாக மாறும். இதை எளிதாக சுத்தம் செய்ய எலுமிச்சை சாறு, வினிகர், பல் துலக்கும் பேஸ்ட், வெதுவெதுப்பான சோப்பு நீர், நெயில் பெயிண்ட் ரிமூவர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகள் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக வெள்ளை நிற சுவிட்ச் போர்டுகளை (Switch Plates) வாங்கி பொறுத்துகிறார்கள். இவை வாங்கிபோட்ட சில நாட்களில் மிகவும் அழகாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் அவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் கைகளில் உள்ள அழுக்கு, தூசி, எண்ணெய், ஈரப்பதம் போன்றவைகளால் அழுக்காகிவிடும். இதனால், அந்த வெள்ளை நிறம் காணாமல் போய், அசிங்கமாக காட்சியளிக்கும். ஆரம்ப காலக்கட்டத்தில் சுவிட்ச் போர்டுகள் நிறம் மங்கி மஞ்சள் நிறமாக மாறும். மேலும், சமையலறையில் (Kitchen) நிறுவப்பட்ட சுவிட்ச் போர்டுகளில் படிந்திருக்கும் அழுக்கு மிகவும் பிடிவாதமாக இருக்கும். இது தவிர, குளியலறை அல்லது குழந்தைகள் அறையின் சுவிட்ச் போர்டுகள் விரைவாக அழுக்காகிவிடும். எனவே, அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்வது மிக முக்கியம். சிலர், வீட்டின் அழகு கெடக்கூடாது என்பதற்காக, அவற்றை மாற்றுவதற்கு பணம் செலவு செய்கிறார்கள். இந்தநிலையில், இவற்றை எளிதாக சுத்தம் செய்வதற்கான சில எளிய குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை:
சுவிட்ச்போர்டை சுத்தம் செய்ய, எலுமிச்சை சாற்றை துணி துவைக்கும் சோப்புடன் கலந்து சிறிது பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இப்போது, இந்த பேஸ்டை ஒரு மிருதுவான மற்றும் சிறிது ஈரமான துணியில் நனைத்து சுவிட்ச்போர்டை துடைக்கவும். அதன் பிறகு, மற்றொரு ஈரமான துணியால் ஒரு முறை துடைத்து, பின்னர் ஒரு உலர்ந்த துணியால் துடைக்கவும். சுவிட்ச்போர்டிற்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வது உங்கள் சுவிட்ச்போர்டை பிரகாசிக்க செய்யும்.
ALSO READ: சமையலறை துர்நாற்றத்தை நீக்க 6 எளிய வழிகள்.. இது புத்துணர்ச்சியை கொடுக்கும்..!




வினிகர்:
உங்கள் வீட்டில் வினிகர் இருந்தால், தண்ணீர் மற்றும் வினிகரை சம அளவில் கலந்து, அதில் ஒரு துணியை நனைத்து பிழிந்து துடைக்கவும். அப்படி இல்லையென்றால், உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படாத பல் துலக்கும் பிரஸ் இருந்தால், அதை எடுத்து சுவிட்ச்போர்டை சுத்தம் செய்யவும். இது அழுக்கு மற்றும் பாக்டீரியா இரண்டையும் நீக்கும்.
பல் துலக்கும் பேஸ்ட்:
நீங்கள் பல் துலக்க பயன்படுத்தப்படும் பேஸ்ட் உங்கள் பற்களை மட்டுமல்ல, சுவிட்ச்போர்டையும் பிரகாசமாக்கும். இதற்காக, பல் துலக்கும் பிரஸை சற்று ஈரமாக்கி கொண்டு, அதில் சிறிது பல் துலக்க பயன்படுத்தப்படும் பேஸ்ட் எடுத்து, அதைக் கொண்டு சுவிட்ச்போர்டுகளை சுத்தம் செய்து, பின்னர் உடனடியாக உலர்ந்த துணியால் துடைத்தால் சுவிட்ச்போர்ட் பளபளக்கும்.
வெதுவெதுப்பான நீர் மற்றும் துணி துவைக்கும் சோப்பு:
தண்ணீரை சூடாக்கி அதில் சிறிதளவு சோப்பைக் கரைக்கவும். கரைசல் தடிமனாக இருக்க குறைந்த தண்ணீரில் அதிக சோப்பைச் சேர்க்க வேண்டும். இப்போது, ஒரு துணி அல்லது பல் துலக்கும் பிரஸின் உதவியுடன், இந்த பேஸ்டை பயன்படுத்தி சுவிட்ச் போர்டுகளை சுத்தம் செய்து, உடனடியாக உலர்ந்த துணியால் துடைத்தால் சுவிட்ச்போர்ட் மிளிரும்.
ALSO READ: பிடிவாதமான கழிப்பறை மஞ்சள் கறைகளா..? சூப்பர் க்ளீன் தரும் ஐஸ் கட்டி தந்திரம்!
நெயில் பெயிண்ட் ரிமூவர்:
சுவிட்ச்போர்டுகளை சுத்தம் செய்ய உங்களிடம் கிளீனர் இல்லையென்றால், அதற்கு பதிலாக நெயில் பெயிண்ட் ரிமூவரைப் பயன்படுத்தலாம். இதற்காக, அதை ஒரு துணியில் நனைத்து சுவிட்ச் போர்ட்டின் பலகையை சுத்தம் செய்யுங்கள். இது சற்று நேரத்தில் அனைத்து கறைகளையும் நீக்கும். இருப்பினும், இதை அதிக அளவில் பயன்படுத்தக்கூடாது. சில நேரங்களில் இது சுவிட்ச்போர்டின் நிறத்தையும் மங்கச் செய்யலாம்.