Toilet Cleaning Tips: பிடிவாதமான கழிப்பறை மஞ்சள் கறைகளா..? சூப்பர் க்ளீன் தரும் ஐஸ் கட்டி தந்திரம்!
Remove Toilet Stains Naturally: கழிப்பறைக் கறைகள் உங்கள் வீட்டுச் சுகாதாரத்தை பாதிக்கும். வாரந்தோறும் சுத்தம் செய்வதோடு, பிடிவாதமான மஞ்சள் கறைகளை அகற்றுவது சவாலாக இருக்கிறது. இந்த பிரச்னைக்கு எளிய தீர்வு ஐஸ் கட்டிகள். ஐஸ் கட்டிகளை கழிப்பறையில் போட்டு, அரை மணி நேரம் விட்டுவிட்டால், உருகும் நீர் கறைகளை தளர்த்திவிடும்.

வீட்டை சுத்தமாக வைக்க பெரும்பாலான மக்களின் அன்றாடம் இல்லையென்றாலும், 2 நாட்களுக்கு ஒருமுறையாவது வீட்டை சுத்தமாக வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், வீட்டின் அறை மற்றும் சமையலறையை (Kitchen) சுத்தம் செய்ய முயற்சிக்கும் மக்கள், குளியலறைகள் மற்றும் கழிப்பறைகளை (Toilet) கவனித்து கொள்ள மறந்துவிடுகிறார்கள். பல வீடுகள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அவற்றை சுத்தம் செய்கின்றன. இதனால், கழிப்பறையில் மஞ்சள் கறைகள் மற்றும் கழிப்பறை இருக்கையில் அழுக்கு படிகிறது. இந்த கறைகளை எத்தனை முறை தேய்த்தாலும் பிடிவாதமாகவும் அகற்ற முடியாதவையாகிவிடுகிறது. டினமாகவும் இருக்கும். இதுமாதிரியான, அசுத்தமான கழிப்பறை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. ஏனெனில் இது பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் தொற்றுநோய்களை உருவாக்கும் இடமாகவும் மாறிவிடுகிறது.
மஞ்சள் கறைகளை அகற்றும் எளிய முறை:
கடைகளில் கிடைக்கும் பல சுத்தப்படுத்தும் பொருட்கள் கிடைத்தாலும், அனைத்தும் பயனற்றதாகிவிடுகிறது. மேலும், இவைகளை வாங்குவதற்காக அதிக பணத்தையும் செலவிட்டு இருப்போம். ஆச்சரியப்படும் விதமாக, ஒரு எளிய வீட்டில் இருக்கும் பொருட்கள் மஞ்சள் கறையை நீக்குவது மட்டுமின்றி, உங்கள் கழிப்பறையை பளபளப்பாக சுத்தமாக வைத்திருக்க உதவும். அந்த பொருள் வேறு ஏதுவும் இல்லை ஐஸ் கட்டிகள்தான். இந்த பிடிவாதமான கறைகளை அகற்றுவதற்கு இவை மலிவான மற்றும் எளிதான தீர்வாகும்.
ALSO READ: சமையலறை துர்நாற்றத்தை நீக்க 6 எளிய வழிகள்.. இது புத்துணர்ச்சியை கொடுக்கும்..!




இந்த ரகசிய தந்திரத்தை முயற்சிக்க, உங்கள் ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு கைப்பிடி ஐஸ் கட்டிகளை எடுத்து நேரடியாக கழிப்பறைக்குள் போடுங்கள். இதன்பிறகு, கழிப்பறையை சுமார் அரை மணி நேரம் யூஸ் பண்ணாமல் விட்டுவிடுங்கள். அப்போது, ஐஸ் கட்டி இயற்கையாக உருகும்போது, குளிர்ந்த நீர் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்கு மற்றும் கறைகளை தளர்த்தி வெளியேற்ற உதவுகிறது.
பெரிதும் உதவும் ஐஸ் கட்டிகள்:
ஐஸ் கட்டிகள் முழுவதுமாக உருகியவுடன், கழிப்பறையை சுத்தம் செய்யவும். மெல்ல மெல்ல உருகி ஓடும் தண்ணீர் தளர்வான அழுக்குகளை வெளியேற்றிவிடும். இன்னும் முழுமையான சுத்தம் செய்ய, உங்கள் வழக்கமான கழிப்பறை கிளீனர் அல்லது திரவ சோப்பைச் சேர்த்து, ஒரு தூரிகையைப் பயன்படுத்தி கழிப்பறையை நன்கு தேய்க்கவும். இது மீதமுள்ள தடயங்களை அகற்றவும், கழிப்பறையை கறைபடாமல் வைத்திருக்கவும் உதவும்.
உருகும் பனிக்கட்டியின் குளிர்ந்த வெப்பநிலை, சுத்தம் செய்ய கடினமாக இருக்கும் பிடிவாதமான கறைகளை மென்மையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் அழுத்தி கைகள் ஸ்க்ரப்பிங் செய்யும் முறையை தடுத்து மிகவும் பயனுள்ளதாக மாறுகிறது. மேலும், இவை குறைந்த நேரத்தில் கழிப்பறையையும் சுத்தம் செய்கிறது.
ALSO READ: ஈஸியாக கழிப்பறையை சுத்தம் செய்வது எப்படி..? பெரிதும் உதவும் வினிகர் முறை..!
கழிப்பறையை சுத்தமாகப் பராமரிப்பது சுகாதாரத்திற்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் அவசியம். வழக்கமான சுத்தம் செய்வதை இதுபோன்ற எளிய தந்திரங்களுடன் சுத்தம் செய்வது கிருமிகள் மற்றும் கறைகள் படிவதைத் தடுக்க உதவுகிறது.