Christmas Cake Recipe: ரம் சேர்க்காத பிளம் கேக் ரெசிபி.. கிறிஸ்துமஸ் நாளில் குடும்பத்துடன் ருசிக்க சூப்பர் கேக்!

Plum Cake Recipe: கிறிஸ்துமஸில் மிகவும் சிறப்பு வாய்ந்தது எதுவென்றால், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கிறிஸ்துமஸ் பிளம் கேக் ஆகும். இந்த கேக்கிற்கு ஸ்பெஷலாக தனி சிறப்பு சுவை உள்ளது. பலரும் இந்த பிளம் கேக்கில் ரம் சேர்ப்பதால் சாப்பிட தயக்கம் காட்டுகிறார்கள். அந்தவகையில் ரம் இல்லாமல் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்கை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Christmas Cake Recipe: ரம் சேர்க்காத பிளம் கேக் ரெசிபி.. கிறிஸ்துமஸ் நாளில் குடும்பத்துடன் ருசிக்க சூப்பர் கேக்!

பிளம் கேக்

Published: 

19 Dec 2025 19:53 PM

 IST

கிறிஸ்துமஸ் (Christmas) தினம் வருவதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை. கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல் மத பாகுபாடுகள் இன்றி அலங்காரங்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை அனைவரும் தயாரித்து கிறிஸ்துமஸை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிறிஸ்துமஸில் மிகவும் சிறப்பு வாய்ந்தது எதுவென்றால், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கிறிஸ்துமஸ் பிளம் கேக் (Plum Cake) ஆகும். இந்த கேக்கிற்கு ஸ்பெஷலாக தனி சிறப்பு சுவை உள்ளது. பலரும் இந்த பிளம் கேக்கில் ரம் சேர்ப்பதால் சாப்பிட தயக்கம் காட்டுகிறார்கள். அந்தவகையில் ரம் இல்லாமல் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்கை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: வீட்டிலேயே சுவையான கேக் செய்ய ஆசையா..? எளிதான வெண்ணிலா கப் கேக் செய்முறை இதோ!

பிளம் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • திராட்சை: 1/2 கப்
  • முந்திரி (நறுக்கியது): 1/4 கப்
  • பாதாம் (நறுக்கியது): 1/4 கப்
  • அத்திப்பழம் (நறுக்கியது): 1/4 கப்
  • டுட்டி ஃப்ருட்டி: 1/4 கப்
  • ஆப்பிள் சாறு: 1 கப்
  • மைதா மாவு: 1.5 கப்
  • பேக்கிங் பவுடர்: 1 தேக்கரண்டி
  • சமையல் சோடா: 1/2 தேக்கரண்டி
  • இலவங்கப்பட்டை தூள்: 1/2 தேக்கரண்டி
  • ஜாதிக்காய் பொடி: 1/4 தேக்கரண்டி
  • வெண்ணெய்: 1/2 கப்
  • சர்க்கரை: 3/4 கப்
  • முட்டைகள்: 2
  • வெண்ணிலா எசன்ஸ்: 1 தேக்கரண்டி
  • பால்: 1/2 கப்

ALSO READ: பால் வேண்டாம்! தக்காளி கொண்டு தரமான பர்ஃபி.. தனித்துவ ஸ்வீட் ரெசிபி!

பிளம் கேக் செய்வது எப்படி..?

  1. கிறிஸ்துமஸ் போன்ற ஒரு நல்ல நாளில் ஒரு சுவையான பிளம் கேக்கை தயாரிக்க, முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாதாம் உள்ளிட்ட ட்ரை ப்ரூட்ஸ்களை ஆப்பிள் சாற்றில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். குறைந்தது 7-8 மணி நேரம் ஊற வைப்பது நல்லது.
  2. இரவு முழுவதும் ஊறவைத்த பிறகு, மறுநாள் கேக் தயாரிப்புகளை எளிதாக தொடங்கலாம். இப்போது, ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஜாதிக்காய் தூள் ஆகியவற்றை சலிக்கவும்.
  3. அடுத்ததாக ஒரு தனி கிண்ணத்தில், வெண்ணெய் மற்றும் ப்ரவுன் சுகர் சேர்த்து லேசான மற்றும் கிரீமி பதம் வரும் வரை மிக்ஸ் செய்யவும். இதனுடன் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து சேர்த்து கலக்க தொடங்கவும்.
  4. முட்டைகளை சேர்த்த பிறகு வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். இப்போது, தயாரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் சர்க்கரை கலவையில் மாவு கலவை மெதுவாகச் சேர்க்கவும்.
  5. தொடர்ந்து, மாவை மென்மையாகவும் கெட்டியாகவும் மாற்ற தேவையான அளவு பால் சேர்க்கவும். இறுதியாக, ஊறவைத்த ட்ரை ப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களைச் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
  6. இவை அனைத்தையும் கட்டி சேராமல் ஒன்றாக கலந்த பிறகு, நீங்கள் கேக்கை சுட விரும்பும் அச்சில் வெண்ணெய் தடவி, அதை வெண்ணெய் காகிதத்தால் வரிசைப்படுத்தவும். மாவை அச்சுக்குள் ஊற்றி 180°C வெப்பநிலையில் 35-40 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  7. அதில் ஒரு ஸ்பூனை கொண்டு குத்தி கேக்கை சரிபார்க்கவும். ஸ்பூனில் பிசுபிசுப்பு இல்லாமல் சுத்தமாக வெளியே வந்தால், கேக் தயாராக உள்ளது. கேக்கை அடுப்பிலிருந்து எடுத்து முழுமையாக வெளியே ஆறவிடவும். அலங்கரிக்க, மேலே ஒரு சிறிய பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரத்தை வைக்கலாம். அவ்வளவுதான் சுவையான ரம் சேர்க்காத பிளம் கேக் ரெடி.
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்