AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Summer Ideas: கோடையில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? மாற்ற வேண்டிய சில விஷயங்கள்!

Summer Health Tips: கோடை காலத்தில் உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்கள் செய்வது அவசியமாகின்றன. இந்தப் பருவத்தில், குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிடுவது மட்டும் போதாது. உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் ஃப்ரஸான பானங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

Summer Ideas: கோடையில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? மாற்ற வேண்டிய சில விஷயங்கள்!
கோடைக்கால ஆரோக்கியம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Apr 2026 15:08 PM IST

கோடை காலத்தில் (Summer) கடுமையான வெயில், ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவை உடலில் நீர் வறட்சியை ஏற்படுத்தக்கூடும். இது பெரும்பாலும் சோர்வு மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கிறது. எனவே, கோடை காலத்தில் உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்கள் செய்வது அவசியமாகின்றன. இந்தப் பருவத்தில், குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிடுவது மட்டும் போதாது. உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் பானங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், நீங்கள் ஆற்றலுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும். ஆகவே, கோடை காலத்தில் காலை (Morning) முதல் ஆற்றலுடன் இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: காலையில் எழுந்தவுடன் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்…

காலையில் வேகமாக எழுந்திரித்தல்:

தாமதமாக எழுவது உங்கள் முழு வழக்கத்தை சீர்குலைக்கிறது. எனவே, கோடைக்காலத்தில் அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் எழுகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்கள் நாள் ப்ரஷாக தொடங்கும். இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும். மேலும், இரவில் சீக்கிரம் உறங்க செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இதன்மூலம், நீங்கள் போதுமான தூக்கத்தை பெற்று, காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கலாம்.

உடற்பயிற்சி:

உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருந்தால், அதை நீங்கள் காலையில் செய்யலாம். காலையில் உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடனும் நல்ல மனநிலையுடனும் வைத்திருக்கும். நீங்கள் காலை நடைப்பயிற்சியும் மேற்கொள்ளலாம். இது உங்களுக்கு புத்துணர்ச்சியையும் தூய்மையான காற்றை வழங்கும்.

உடல் நீரேற்றம்:

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு உங்களை மேலும் சோர்வடைய செய்யும். எனவே, கோடைக்காலத்தில் நிறைய தண்ணீர் குடித்தல் மிக மிக முக்கியமானது. உங்கள் உணவில் எலுமிச்சை நீர், இளநீர், மோர், சத்து மாவு மற்றும் ஆப்பிள் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

புரதம் நிறைந்த காலை உணவு:

புரதச்சத்து நிறைந்த காலை உணவு, உடல் எடையை அதிகரிக்காமல் நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலை தரும். இதற்காக, காலை உணவில் புதிய பழங்கள், ஸ்மூத்திகள், ஓட்ஸ், ப்ரை ப்ரூட்ஸ்கள் மற்றும் முட்டைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

ALSO READ: கோடை வெப்பத்தைக் கட்டுப்படுத்த 7 சுலபமான ஆரோக்கிய ரகசியங்கள்!

ORS பயன்பாடு:

ஏதேனும் காரணத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்தால், ORS அருந்துவது நன்மை பயக்கும் எனக் கருதப்படுகிறது. இது உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகளை வழங்கி, நீர்ச்சத்தை விரைவாக மீட்டெடுக்கிறது. இருப்பினும், கோடை காலத்தில் கிடைக்கும் அதிக சர்க்கரை கொண்ட குளிர் பானங்களைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதற்குப் பதிலாக, உங்கள் அன்றாட வழக்கத்தில் இயற்கை பானங்களைச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

Follow Us