மேகி விற்பனையில் மாதத்துக்கு ரூ.6 லட்சம் வருமானமா? நம்ப முடிகிறதா…வைரலாகும் வீடியோ!
Young Man Selling Maggi: ஒரு இளைஞர் மேகி விற்பனை செய்து மாதத்துக்கு ரூ. 6 லட்சம் சம்பாதிப்பதை நம்மால் நம்ப முடிகிறதா. ஆம் ஒரு மாநிலத்தில் மலைப் பகுதியில் சாதாரண மேகி கடை அமைத்து ஒரு நாளைக்கு ரூ.21,000 சம்பாதித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பனிகள் படர்ந்த ஒரு மலைப் பகுதியில் தாக்கூர் என்ற இளைஞர் ஒருவர் மேகி விற்பனை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் தாக்கூர் ஒரு சிலிண்டர் மற்றும் மேஜையை வைத்து, அதில், மேகியை தயார் செய்து ஒரு தட்டு ரூ.70-க்கும், சீஸ் மேகி ரூ.100- க்கும் விற்பனை செய்து கொண்டிருந்தார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப 75 கிராம் மேகி பாக்கெட் கடைகளில் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 5 மணி நேரத்தில் 200 மேகி தட்டுகளை விற்பனை செய்ததாக தாக்கூர் கூறினார். உடனடி நூடுல்சை வாங்க சுற்றுலா பயணிகள் அவரது சிறிய கடைக்கு வருவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. ஒரு நாளில், தாக்கூர் சுமார் 300 முதல் 350 மேகி தட்டுகளை விற்பனை செய்கிறார். ஒவ்வொரு தட்டும் ரூ.70-க்கு விற்பனை செய்தால் ஒரு நாளைக்கு அவருக்கு ரூ.21 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. அதாவது மாதத்துக்கு ரூ.6.30 லட்சம் வருமானம் பெறுகிறார்.
செலவுகள் கழிக்கப்படாமல் தாக்கூரின் வருமானம்
இந்த எண்ணிக்கையில் அவரது செலவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதாவது அவரது சிலிண்டர் விலை, அவர் பயன்படுத்திய ஒருமுறை பயன்படுத்தும் கருவி மற்றும் அவர் வாங்கிய மேகி பாக்கெட்டுகள் ஆகியவற்றுக்கு எவ்வளவு செலவானது என்பது இந்த வருமானத்தில் கழிக்கப்படவில்லை. இதனால், இந்த செலவுகள் கழிக்கப்பட்டால் அவரது வருமானம் ரூ.21 ஆயிரத்துக்கு குறைவாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருந்தும் சமூக ஊடக பயனர்கள் தாக்குவரின் வருவாயை கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.




மேலும் படிக்க: Viral Video : டெல்லி மெட்ரோவில் சிறுநீர் கழித்த நபர்.. வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம்!
மேகி விற்பனை மூலம் மாதம் தோறும் ரூ.6 லட்சம் வருமானம்
ஒரு மாதத்தில் 30 நாட்கள் மேகியை விற்பனை செய்வதன் மூலம், ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.6 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்க முடியும் என்று சிலர் அந்த வீடியோவுக்கு கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் கருத்து பதிவிட்ட ஜாப் சோட் டன் பீர் என்பவர் நான் என் வேலையை விட்டு விட வேண்டுமா என்று கமெண்ட் பதிவு செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
சமூக வலைதளங்களில் 3.5 மில்லியன் பார்வையாளர்கள்
இதே போல, ஏராளமானோர் அந்த வீடியோவுக்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பனி படர்ந்த மலைப் பிரதேசத்தில் சாதரண மேகி பாக்கெட்டுகளை வாங்கி வந்து அதனை தயார் செய்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து வரும் தாக்கூரின் வீடியோ சமூக வலைதளங்களில் 3.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: Viral Video : இறந்த திமிங்கலத்தின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்த இருவர்.. இணையத்தில் குவியும் கண்டனம்!