Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : டெல்லி மெட்ரோவில் சிறுநீர் கழித்த நபர்.. வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம்!

Man Urinate Inside Delhi Metro | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் டெல்லி மெட்ரோவில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Viral Video : டெல்லி மெட்ரோவில் சிறுநீர் கழித்த நபர்.. வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jan 2026 23:48 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் மட்டுமன்றி, குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும். அவ்வாறு இணையத்தில் வைரலாகும் வீடியோக்களில் நல்ல செயல்கள் அடங்கிய வீடியோக்கள் பாராட்டுக்களையும், குற்ற சம்பங்கள் அல்லது தீய செயல்கள் அடங்கிய வீடியோக்கள் எதிர்ப்பையும், கண்டனங்களையும் பெறும். அந்த வகையில், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று மிக கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

டெல்லி மெட்ரோவில் சிறுநீர் கழித்த நபர்

பொதுவெளியை மிகவும் தூய்மையாக வைத்திருப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தாலும், அந்த இடங்களை தூய்மையாக பராமரிக்க உதவி செய்வது பொதுமக்களின் கடமையாக உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் பொதுவெளிகளை அசுத்தம் செய்யாமல் இருக்கும் நிலையில், சிலர் எதை குறித்தும் கவலைக்கொள்ளாமல் பொது இடங்களை அசுத்தம் செய்யும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், டெல்லி மெட்ரோவில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பால்கனியில் சிக்கிக்கொண்ட இளைஞர்கள்.. காப்பாற்றிய பிளிங்கிட் ஊழியர்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இரவு நேரத்தில் ஒருவர் டெல்லி மெட்ரோவில் சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரை ஒருவர் வீடியோ எடுக்கும் நிலையில், அதனை பார்த்துவிட்டு அவர் அங்கிருந்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.