Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : இறந்த திமிங்கலத்தின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்த இருவர்.. இணையத்தில் குவியும் கண்டனம்!

Two Men Sat On Dead Whale and Clicked Picture | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், நடுக்கடலில் இருவர் இறந்த திமிங்கலத்தின் உடல் மீது ஏறி புகைப்படம் எடுக்கம் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : இறந்த திமிங்கலத்தின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்த இருவர்.. இணையத்தில் குவியும் கண்டனம்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jan 2026 23:26 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும்  வித்தியாசமான சம்பங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவ்வாறு இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சில வீடியோக்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பெறும். அந்த வகையில், இறந்த திமிங்கலத்தின் உடல் மீது இருவர் அமர்ந்து புகைப்படம் எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இறந்த திமிங்கலத்தின் மீது ஏறி புகைப்படம் எடுத்த இருவர்

சமூக ஊடகங்களின் மேல் உள்ள மோகத்தால் பலரும் வித்தியாசமான வேலைகளை செய்து, அது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் வெளியிடுகின்றனர். சில சாதனை வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சில வீடியோக்கள் கடும் விமர்சனங்களை பெற்றுத் தரும். அந்த வகையில்,  திமிங்கலத்தின் மீது இருவர் அமர்ந்து புகைப்படம் எடுத்த வீடியோ வெளியாகி மிக கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பெற்றோரின் முதல் விமான பயணம்.. மகன் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சிலர் படகில் பயணம் செய்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது நடுகடலில் திமிங்கலம் ஒன்று செத்து மிதந்துக்கொண்டு இருக்கிறது. அதனை கண்டு படகில் இருந்து இறங்கிய சிலர், அந்த திமிங்கலத்தின் மீது ஏறி அமர்ந்து புகைப்படம் எடுக்கின்றனர். கடலின் மிகப்பெரிய உயிரினமாக திமிங்கலம் உள்ள நிலையில், அந்த இருவர் செய்த செயல் அதனை அவமரியாதை செய்யும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.