குடியரசு தின விழாவில் வழங்கப்படும் பத்ம விருதுகள் – தமிழ்நாட்டில் இருந்து விருது பெறப்போவது யார்?
Padma Awards 2026 : குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறந்த கலைஞர்களுக்கு பத்ம விருது வழங்கப்படவிருக்கிறது. பத்ம விருதுகள் பெறுபவர்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்லது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பத்ம விருதுகள் குறித்து வெளியான தகவல்
புதுடெல்லி ஜனவரி 25 : கலை, சமூக சேவை, தொழில், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களை கௌரவிக்கும் விதமாக பத்ம விருதுகள் 2026, இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அறிவிக்கப்பட உள்ளன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை (Republic Day 2026) முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்த விருதுகள், நாட்டின் உயரிய சிவில் விருதுகளாக கருதப்படுகின்றன. இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஜனவரி 25, 2026 அன்று மாலை அறிவிக்கப்படவுள்ளன.
மத்திய அரசு வழங்கும் பத்மா விருதுகள் மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன. அவை பத்ம விபூஷண், பத்ம பூஷண், மற்றும் பத்ம ஸ்ரீ. இந்த விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, அறிவியல், பொறியியல், மருத்துவம், சமூக சேவை, விளையாட்டு, தொழில், பொது சேவை உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் கணிசமான பங்களிப்பு அளித்தவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளை பெறப்போவது யார்?
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர் புன்னியமூரத்தி நடேசன்
மருத்துவர் புன்னியமூர்த்தி நடேனுக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர் புன்னியமூர்தித் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக சித்த மருத்துவம், நவீன அறிவியல் ஆகியவற்றை ஒன்றினைத்து இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மேலும் 40க்கும் மேற்பட்ட நோய்களை சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க : குடியரசு தின சிறப்பு பேரணிக்கு இதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது.. லிஸ்ட் இதோ!
கே ரஜனிவேல்
புதுச்சேரியை சேர்ந்த ரஜனிவேல், தமிழ்நாட்டைச் சேர்ந்த தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பத்தை அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார். இவரிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம் பயின்று வருகிறார்.
ஓதுவார் திருத்தணி சுவாமி நாதன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திருமுறையை பாடி ஆன்மீக சேவையாற்றி வருகிறார். இவர் தமிழ் சைவ இசை குறிப்பாக தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை கோவில்களிலும் வெளிநாடுகளிலும் பாடி புகழ்பெற்றவர்.
ஆர்.கிருஷ்ணன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணனுக்கு கலை பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. குரும்பா ஓவியரான இவர் பழம்பெரும் ஓவிய கலைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இவர் இயற்கை நிறமிகளைக் கொண்டு ஓவியம் வரைந்து வருகிறார். மேலும் பழம் பெரும் பாறை ஓவியங்களையும் இவர் வரைந்து அதிக மக்களை சென்றடைய செய்திருக்கிறார்.
ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜஸ்பதி காளியப்ப கவுண்டருக்கு கலை பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. சேலத்தை சேர்ந்த இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெண்கல சிலைகளை செய்து வருகிறார். இவரது கலைப்படைப்புகள் பெரும்பாலான கோவில்களிலும், அருங்காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : குடியரசு தினம் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? இந்திய அரசியலமைப்பு குறித்த 7 முக்கிய தகவல்கள்
திருவாரூர் பக்தவட்சலம்
தமிழ்நாட்டை சேர்ந்த திருவாரூர் பக்தவட்சலத்திற்கு கலை பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இவர் 1008 பேரைக்கொண்டு தஞ்சாவூர் பாணியிலான மிருதங்கம் வாசிப்பு நிகழ்வை நடத்தி சாதனை படைத்துள்ளார். இந்தியா சார்பில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் மிருதங்க இசை கச்சேரிகளை நடத்தியிருக்கிறார்.
பொதுவாக குடியரசு தினத்தன்று பத்மா விருது பெறுவோரின் பட்டியல் அறிவிக்கப்படுவதுடன், விருது வழங்கும் விழா பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும். பத்மா விருதுகள் அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், கலைஞர்கள், அறிவியல் வல்லுநர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல், 2026 பத்மா விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் நாடு முழுவதும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.