AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : மீண்டும் விலை குறைந்த தங்கம்.. ஒரு கிராம் ரூ.15,000-க்கு கீழ் சரிந்தது!

Gold and Silver Price Cut Down In Chennai | சென்னயில் இன்று தங்கம் விலை இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : மீண்டும் விலை குறைந்த தங்கம்.. ஒரு கிராம் ரூ.15,000-க்கு கீழ் சரிந்தது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Mar 2026 10:29 AM IST

சென்னை, மார்ச் 13 : சென்னையில் நேற்று (மார்ச் 12, 2026) தங்கம் விலை (Gold Price) குறைந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போருக்கு மத்தியில் சரிய தொடங்கிய தங்கம் விலை

பிப்ரவரி 28, 2026 முதலே ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) ஆகியவை மிக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் புவிசார் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்தது.

இதையும் படிங்க : இனி ரூ.20 லட்சம் வரையிலான சொத்து பதிவுக்கு பான் கட்டாயமில்லை.. ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் புதிய விதி!

இதன் காரணமாக உலக நாடுகள் கடும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை கடந்துச் செல்ல சில நாடுகளுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் சிக்கல் படிப்படியாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் சிக்கலுக்கு வழி பிறந்துள்ள நிலையில், தற்போது தங்கம் விலை குறைந்து வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
04 மார்ச் 2026 ரூ.15,200 ரூ.1,12,600
05 மார்ச் 2026 ரூ.15,120 ரூ.1,20,960
06 மார்ச் 2026 ரூ.14,960 ரூ.1,19,680
07 மார்ச் 2026 ரூ.15,050 ரூ.1,20,400
08 மார்ச் 2026 ரூ.15,050 ரூ.1,20,400
09 மார்ச் 2026 ரூ.14,950 ரூ.1,19,600
10 மார்ச் 2026 ரூ.15,050 ரூ.1,20,400
11 மார்ச் 2026 ரூ.15,120 ரூ.1,20,960
12 மார்ச் 2026 ரூ.14,970 ரூ.1,19,760
13 மார்ச் 2026 ரூ.14,900 ரூ.1,19,200

இதையும் படிங்க : மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.. ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us