Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வக்ஃபு திருத்த சட்டம்.. கலவர பூமியான மேற்கு வங்கம்.. 3 பேர் பலி.. நடந்தது என்ன?

West Bengal Waqf Protests: கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்ஃபு திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, சட்டமாகவும் அமலானது. இதற்கு மேற்கு வங்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வக்ஃபு திருத்த சட்டம்.. கலவர பூமியான மேற்கு வங்கம்.. 3 பேர் பலி..  நடந்தது என்ன?
மேற்கு வங்கம் வன்முறைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 Apr 2025 07:01 AM

கொல்கத்தா, ஏப்ரல் 13: வக்ஃபு சட்டத்துக்கு (waqf amendment Act 2025) எதிராக நடக்கும் போராட்டதால் மேற்கு வங்கம் (West Bengal Waqf Protests) கலவர பூமியாக மாறியுள்ளது. கொல்கத்தாவில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.  பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால், மேற்கு வங்கத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் வக்ஃபு திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது.

கலவர பூமியான மேற்கு வங்கம்

இந்த வக்ஃபு திருத்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். மேலும், இந்த சட்டம் தங்களுக்கு எதிரானது என்று இஸ்லாமியர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்த வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் 2025 ஏப்ரல் 11ஆம் தேதி வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து ஏரிந்தன. கடைகள் போன்றவற்றை அடித்து நொறுக்கின.

அதை தடுக்க வந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். காவல்துறையின் வாகன்ஙகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வன்முறை வெடித்திருக்கிறது.

இந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 18 போலீசார் உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர். மேலும், 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடந்தது என்ன?


போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, முர்ஷிதாபாத்தில் 300 பிஎஸ்எஃப் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.  வன்முறையை கட்டுப்படுத்த இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளி பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலம் வக்ஃப் (திருத்த) சட்டத்தை செயல்படுத்தாது என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் – இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த சட்டம் எங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்படாது. அப்படியானால் கலவரம் எதற்காக? நினைவில் கொள்ளுங்கள்.

பலர் எதிர்த்துப் போராடும் சட்டத்தை நாங்கள் உருவாக்கவில்லை. இந்தச் சட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. எனவே நீங்கள் விரும்பும் பதிலை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும்” என்று கூறினார். எனவே, போராட்டத்தை கட்டுப்படுத்த அங்கு பாதுகாப்பு படையினர் குவிந்துள்ளனர்.

கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?...
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்...
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!...
தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் - விஜய் தேவரகொண்டா
தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் - விஜய் தேவரகொண்டா...
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?...
சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?
சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?...
இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. நீரஜ் சோப்ராவிற்கு கௌரவம்!
இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. நீரஜ் சோப்ராவிற்கு கௌரவம்!...
ஜாலியோ ஜிம்கானா முதல் நேசிப்பாயா வரை... இந்த வார ஓடிடி லிஸ்ட்!
ஜாலியோ ஜிம்கானா முதல் நேசிப்பாயா வரை... இந்த வார ஓடிடி லிஸ்ட்!...
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. என்ன பலன் தெரியுமா?
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. என்ன பலன் தெரியுமா?...
திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா!
திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா!...
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து! விஜய் ஷா மீது FIR!
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து! விஜய் ஷா மீது FIR!...