துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன்.. பரிதாப பலி.. சோக சம்பவம்!

Rajasthan Child Death | ராஜஸ்தானில் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த 5 வயது சிறுவன், வீட்டின் அறையில் இருந்த தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மரணம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன்.. பரிதாப பலி.. சோக சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

09 Sep 2025 08:58 AM

 IST

ஜெய்ப்பூர், செப்டம்பர் 09 : ராஜஸ்தானில் (Rajasthan) நாட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனி தந்தை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 5 வயது சிறுவன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தன்னை தானே சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன் பரிதாப பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 5 வயது சிறுவன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட அதிர்ச்சி சம்பசம் நடைபெற்றுள்ளது.  போலீசாரின் தகவலின்படி, சிறுவனின் வீட்டில் உள்ள அறை ஒன்றில் பெட்டியில் நாட்டு துப்பாகி ஒன்று வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில், தேவன்ஷு என்ற அந்த 5 வயது சிறுவன் அறைக்கு சென்று அந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளார். அப்போது தெரியாமல் அந்த சிறுவன் துப்பாக்கியின் டிரகரை அழுத்தியுள்ளார். இதில் துப்பாக்கியில் இருந்து வெளியே வந்த குண்டு நேரடியாக சிறுவனின் தலையில் பாய்ந்துள்ளது.

இதையும் படிங்க : கள்ளக்காதலனுடன் உள்ளாசமாக இருப்பதை கண்ட 6 வயது சிறுமி.. கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்!

ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள்

துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு அறைக்கு சென்றுள்ளனர். அங்கு சிறுவன் ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் சிறுவனின் குடும்பத்தினர் தலையில் இடியை இறக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : மது குடிப்பதை நிறுத்த சொன்ன மனைவி.. மொட்டை அடித்து சித்ரவதை செய்த கொடூர கணவன்!

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிறுவனின் தந்தை அந்த துப்பாக்கியை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வந்த நிலையில், அது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.