AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாஜகவில் இணையும் ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா.. வெளியான பரபரப்பு தகவல்..

Aam Aadmi MPs To Join BJP: மக்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆளும் பாஜக கட்சியுடன் இணைய இருப்பதாகவும், எம்.பி ராகவ் சதா பாஜகவில் சேர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இணையும் ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா.. வெளியான பரபரப்பு தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 24 Apr 2026 17:39 PM IST

மக்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆளும் பாஜக கட்சியுடன் இணைய இருப்பதாகவும், எம்.பி ராகவ் சதா பாஜகவில் சேர இருப்பதாகவும் குறப்படுகிறது. ராகவ் சதா, பாஜகவில் சேர உள்ளதாக அறிவித்துள்ளார். ராஜ்யசபாவில் உள்ள ஆம் ஆத்மி எம்.பிக்களில் பெரும்பாலானோர் அவருடன் சேரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது; சில வாரங்களுக்கு முன் அவர் ராகவ் சதாவை கட்சியில் தாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இணையும் ஆம் ஆத்மி எம்.பிக்கள்:

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராஜ்யசபாவில் உள்ள AAP-யின் 10 எம்.பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பாஜகவுடன் இணைவார்கள் என்று ராகவ் சதா தெரிவித்தார். ஊழலை எதிர்த்து ஆட்சிக்கு வந்த கட்சி தற்போது நேர்மையான அரசியலிலிருந்து விலகிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஹர்பஜன் சிங் மற்றும் சுவாதி மலிவால் உள்ளிட்ட பிரபல முகங்களும் பாஜகவுடன் இணைவதாக அவர் கூறினார். மேலும் ராஜிந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி, அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகியோரும் இந்த இணைப்பில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி நேர்மையான் அரசியலில் இருந்து விலகியுள்ளது:

“15 ஆண்டுகள் என் வாழ்க்கையை அர்ப்பணித்த AAP, இப்போது நேர்மையான அரசியலிலிருந்து விலகியுள்ளது. நான் தவறான கட்சியில் இருந்த சரியான மனிதன். அதனால் கட்சியைவிட்டு விலகி மக்களிடம் நெருங்குகிறேன்,” என ராகவ் சதா கூறினார்.

அவர் பாஜகவில் இணைந்த பின் அமைச்சராக நியமிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2012ஆம் ஆண்டு AAP தொடங்கப்பட்டதிலிருந்து சதா கட்சியுடன் இணைந்திருந்தார். 2015ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அலை மீது டெல்லியில் ஆட்சிக்கு வந்த கேஜ்ரிவாலின் நெருங்கிய நம்பிக்கையாளர் என்ற வகையில் அவர் செயல்பட்டு வந்தார். 2015ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அலை மீது டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய கேஜ்ரிவாலுடன் அவர் முக்கிய பங்காற்றினார்.

பழைய ஆம் ஆத்மி இல்லை:

பாஜகவில் சேரும் தனது முடிவை நியாயப்படுத்திய ராகவ் சதா, “ஆம் ஆத்மி இனி முன்பிருந்த கட்சியாக இல்லை” என்று தெரிவித்தார். “இந்தக் கட்சியின் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவன் நான். முழு அர்ப்பணிப்புடன் பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியை வளர்த்தோம். ஆனால் இன்று ஆம் ஆத்மி ஊழலில் சிக்கிய, சமரசம் செய்த கட்சியாக மாறியுள்ளது. பழைய ஆம் ஆத்மி இல்லை. அந்த தவறான செயல்களில் நான் ஈடுபட விரும்பவில்லை,” என்றார்.

தனக்கு இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்ததாகவும்—அரசியலை விட்டு விலகுவது அல்லது சரியானதை தேர்வு செய்வது—அதில் இரண்டாவது தேர்வை தான் எடுத்ததாகவும் அவர் கூறினார். “ராஜ்யசபாவில் உள்ள ஆம் ஆத்மி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பாஜகவுடன் இணைகின்றனர்,” என்றும் தெரிவித்தார்.

பொதுவெளியில் வெளிப்பட்ட பிளவு: 

ராகவ் சதா பாஜகவில் இணைவது எதிர்பாராத ஒன்றாக இல்லை. இந்த மாத தொடக்கத்தில், ராஜ்யசபாவில் துணைத் தலைவராக இருந்த பதவியிலிருந்து ஆம் ஆத்மி அவரை நீக்கியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவர் பேசுவதற்கு கட்சியின் நேர ஒதுக்கீட்டை வழங்க வேண்டாம் என ராஜ்யசபா தலைவரிடம் கட்சி கோரியது.

இதற்கு எதிராக ராகவ் சதா வீடியோ மூலம் பதிலளித்து, இது “திட்டமிட்ட பிரச்சாரம்” மற்றும் “ஒத்துழைத்த நடவடிக்கை” என்று கூறினார்.

Follow Us