Former Jharkhand CM Shibu Soren Death: ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் மறைவு.. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் இரங்கல்!

PM Modi Condolences: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பழங்குடித் தலைவருமான ஷிபு சோரன் (81) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி டெல்லியில் அஞ்சலி செலுத்தினார்.

Former Jharkhand CM Shibu Soren Death: ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் மறைவு.. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் இரங்கல்!

பிரதமர் மோடி இரங்கல்

Updated On: 

04 Aug 2025 16:07 PM

டெல்லி, ஆகஸ்ட் 4: ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் (Ex-Jharkhand CM Shibu Soren) இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 4ம் தேதி டெல்லியில் காலமானார். இந்தநிலையில், 81 வயதில் காலமான ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், பழங்குடியின தலைவருமான ஷிபு சோரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி (PM Modi) டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும் (Hemant Soren) பிரதமர் சந்தித்து அவரது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு:


டெல்லி கங்காரம் மருத்துவமனையில் ஷிபு சோரனுக்கு அஞ்சலி செலுத்தும் படங்களையும், மகன் ஹேமந்த் சோரன் உட்பட முழு குடும்பத்தினரையும் சந்திக்கும் படங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், தந்தை மறைவை எண்ணி ஹேமந்த் சோரன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், பிரதமரை கட்டிபிடித்து அழுஹார். தந்தையை இழந்த துயரம் அவரது முகத்தில் தெளிவாக தெரிந்தது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ஸ்ரீ ஷிபு சோரன் ஜிக்கு அஞ்சலி செலுத்த சர் கங்கா ராம் மருத்துவமனைக்குச் சென்றேன். அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். ஹேமந்த் ஜி, கல்பனா ஜி மற்றும் ஸ்ரீ ஷிபு சோரன் ஜி ஆகியோருக்கு எனது அனுதாபங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

ALSO READ: லக்கேஜ் ஏன் அதிகமா இருக்கு? விமான ஊழியர்களை அட்டாக் செய்த ராணுவ அதிகாரி.. ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் பரபரப்பு

குடியரசு தலைவர் இரங்கல்:

ஷிபு சோரன் மறைவை அறிந்துகொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் மருத்துவமனைக்கு சென்றார். அதனை தொடர்ந்து, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஷிபு சோரன் பழங்குடி அடையாளத்திற்கும் ஜார்க்கண்ட் மாநில உருவாக்கத்திற்கும் ஆதரவாகப் பணியாற்றினார். அடிமட்டத்தில் அவர் ஆற்றிய பணிகளுக்கு மேலதிகமாக, ஜார்க்கண்ட் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பங்களித்தார்.

மக்களின் நலனில், குறிப்பாக பழங்குடி சமூகங்களின் நலனில் அவர் காட்டிய முக்கியத்துவம் எப்போதும் நினைவுகூரப்படும். அவரது மகனும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஸ்ரீ ஹேமந்த் சோரன் ஜி, பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

யார் இந்த ஷிபு சோரன்..?

ஷிபு சோரன் 1944 ஜனவரி 11 அன்று பீகாரின் ஹசாரிபாக்கில் பிறந்தார். ஷிபு சோரன் டிஷோம் குரு மற்றும் குருஜி என்று அழைக்கப்படுகிறார். பழங்குடியினரின் சுரண்டலுக்கு எதிராக ஷிபு சோரன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். கடந்த 1977ம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தோல்வியை சந்தித்தார்.

ALSO READ: ஆபரேஷன் சிந்தூர் – தன்னிறைவு பெற்ற இந்தியாவின் சக்தி.. வாரணாசியில் பிரதமர் மோடி உரை..

தொடர்ந்து, 1980ம் ஆண்டு முதல் ஷிபு சோரன் தொடர்ச்சியாக பல முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் என்ற தனி மாநிலத்தை உருவாக்கும் இயக்கத்திலும் முக்கிய பங்காற்றினார். ஜார்க்கண்டின் முதல்வராக மூன்று முறை (2005, 2008, 2009) பதவி வகித்துள்ளார். ஆனால், இதுவரை கூட அவர் தனது பதவிக் காலத்தை முழுமையாக முடித்தது இல்லை.

Related Stories
கர்ப்பினியின் கன்னத்தில் அறைந்த மருத்துவர் – குழந்தை மரணம்…. உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு
சிறுமியுடன் எடுத்த செல்ஃபியை ஸ்டேட்டசில் வைத்த இளைஞர்.. கொலைவெறி தாக்குதல் நடத்திய சிறுமியின் அண்ணன்!
லின் இன் பார்ட்னரை கொன்ற பெண்… ரூ.7 லட்சத்துடன் தப்பியோட்டம்.. நடந்தது என்ன?
லக்கேஜ் ஏன் அதிகமா இருக்கு? விமான ஊழியர்களை அட்டாக் செய்த ராணுவ அதிகாரி.. ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் பரபரப்பு
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வீட்டிலேயே இருங்கள்.. குஜராத் போலீஸ் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!
Prajwal Revanna: பாலியல் வன்கொடுமை வழக்கு.. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை..!