Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

”பெண்களுக்கு தைரியம் இல்லை” பஹல்காம் தாக்குதல் குறித்து பாஜக எம்பி சர்ச்சை!

BJP MP Chander Jangra on Pahalagam Attack : பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் குறித்து ஹரியானா பாஜக எம்பி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளை எதிர்த்து போராட பெண்களுக்கு வீரமும், தைரியமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

”பெண்களுக்கு தைரியம் இல்லை” பஹல்காம் தாக்குதல் குறித்து பாஜக எம்பி சர்ச்சை!
பாஜக எம்பி ராம் சந்தர் ஜங்ராImage Source: TV9
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Jun 2025 07:58 AM

டெல்லி, மே 25 : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் குறித்து ஹரியானாவைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராம் சந்தர் ஜங்ரா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதாவது, பெண்களிம் வீரம், தைரியம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இவரின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  ஹரியானா மாநிலத்தில் நடந்த  நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராம் சந்தர் ஜங்ரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.  அவர் பேசுகையில், ” பஹல்காமில் நடந்த தாக்குதலில்போது பெண்கள் பயங்கரவாதிகளிடம் சண்டையிட்டிருக்க வேண்டும்.

”பெண்களுக்கு தைரியம் இல்லை”

பெண்களுக்கு வீரமும், தைரிய மனப்பான்மையும் இல்லை. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் அக்னிவீர் பயிற்சி பெற்றிருந்தால், அவர்கள் பயங்கரவாதிகளை சமாளித்து இருப்பார்க்ள. இதனால், உயிரிழப்புகளை குறைந்திருக்கும். பெண்கள் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்கான உறுதியான நிலைபாட்டை எடுக்கவில்லை.

இதனால், அவர்கள் கணவர்களை இழந்துள்ளனர். மக்களை கொலை செய்யும் நோக்கில் பயங்கரவாதிகள் வந்துள்ளனர். அவ்ரகள் இரக்கம் இருக்காது. மக்கள் கெஞ்சியதை அவர்கள் கண்டுகொல்லாமல் கொன்றுள்ளனர். ராணி அஹில்யாபா, ராணி லட்சுமிபாய் போன்று இருக்க வேண்டும். எங்கள் சகோதரிகள் தைரியமாகவும் தைரியமாகவும் வாழ வேண்டும்” என்று கூறினார்.

பாஜக எம்பி சர்ச்சை

பாஜக எம்பி பேச்சுக்கு கண்டனம்

பாஜக எம்பியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாஜக எம்பி ராம் சந்தர் ஜங்ராவின் பேச்சு வெட்கக்கேடானது. ஆர்எஸ்எஸ்-பாஜகவின் அற்ப மனநிலையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்கள் குறித்து அவமரியாதையாக பேசிய மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா, துணை முதல்வர் ஜெகதீஷை ஏன் பதவிநீக்கம் செய்யவில்லை. பிரதமர் மோடி உங்கள் நரம்புகளில் சிந்துர் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அப்படி என்றால, பெண்களை மீது மரியாதை வைத்திருந்தால் பாஜகவின் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மேலும், காங்கிரஸின் ஜெயராம் ரமேஷ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?
2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?...
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்......
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...