நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி – எதிர்கட்சிகள் கடும் விவாதம்

Parliament Update No Confidence Motion : நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா மீது எதிர் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மார்ச் 11, 2026 அன்று விவாதம் நடைபெற்ற நிலையில் பரபரப்பான விவாதங்கள் எழுந்தன. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி - எதிர்கட்சிகள் கடும் விவாதம்

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 Mar 2026 21:46 PM

 IST

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா மீது எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மார்ச் 11, 2026 அன்று விவாதம் நடைபெற்ற நிலையில் பரபரப்பான விவாதங்கள் எழுந்தன. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இந்த விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் நாடாளுமன்ற அவையில் பரபரப்பை ஏற்படுத்தின. அவர்களின் தலைவரே பிரதமரை அணைத்து, ஃபிளையிங் கிஸ் கொடுக்கிறார் என்கிறார். இந்த நிலையில் எதிர்கட்சியினர் அவர் பயன்படுத்திய சொற்கள் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாதவை என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில் எதிர்க்கட்சியினர் முழக்கங்களுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கு மொத்தம் 238 எம்பிக்கல் மட்டுமே இருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 99 எம்பிகள் மட்டுமே உள்ளனர். மேலும் சமாஜ்வாதி கட்சி, திமுக, திரிமுணல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் உள்ளனர்.

இதையும் படிக்க : போர் சூழல்.. விலையேறும் விமான டிக்கெட்.. ஏர் இந்தியா சொன்ன முக்கிய விவரம்!

நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேச்சு

 

ஆனால் மத்திய பாஜக அரசுக்கு மொத்தம் 293 எம்பிகள் உள்ளனர். இதில் பாஜகவிற்கு 240 பேரும் ஜேடியு, டிடிபி உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது. சபாநாயகர் ஓம் பிர்லா பாகுபாடு காட்டுவதாக குற்றஞ்சாட்டி எதிர்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். குறிப்பாக அவர் எப்போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் இதனால் எதிர்கட்சிகளின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் போது முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே எழுதிய புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை வாசிக்க ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டினர். மேலும் ஒழுங்கு நடவடிக்கை காரணம் காட்டி எதிர்கட்சி எம்பிகள் முழு பட்ஜெட் கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : சிலிண்டர் சிக்கல்.. அமலானது அத்தியாவசிய பொருட்கள் சட்டம்.. இனி என்ன நடக்கும்?

அமித் ஷா விளக்கம்

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா சபாநாயகரின் தீர்மானங்களை கேள்விக்குட்படுத்துவது ஜனநாயக அமைப்பை கேள்வி கேட்பது போன்றது. நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அரசு மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து அவருக்கு ஆதரவு அளித்தன. சபாநாயகரின் முடிவுகளில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அது அவருடைய இறுதி முடிவாக கருதப்படுகிறது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..