Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகிஸ்தானுக்கு சிக்கல்.. பேச்சுவார்த்தைக்கு மறுத்த இந்தியா.. ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதிலடி!

India Pakistan Conflict : பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், அதற்கு இந்திய மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு, பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சிக்கல்.. பேச்சுவார்த்தைக்கு மறுத்த இந்தியா.. ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதிலடி!
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 31 May 2025 06:34 AM

டெல்லி, மே 30 : பாகிஸ்தானின் அமைதி பேச்சுவார்த்தைக்கு (india pakistan conflict) இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்றால் காஷ்மீர் பிரச்னை (Kashmir issue) மற்றும் பயங்கரவாதம் பற்றியே இருக்கும் என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பயங்ரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிப்பதாக இந்தியா குற்றச்சாட்டி,  பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும்  தாக்குதல் நடத்தியது. இப்படியே, மூன்று நாட்கள் நடந்த நிலையில், 2025 மே 10ஆம் தேதி தாக்குதல் நிறுத்தப்பட்டது. தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய நிறுத்தி வைத்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு மறுத்த இந்தியா

இது பாகிஸ்தானுக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும், பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்தியதால், பாகிஸ்தானில் பொருளாதார சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்தார். வர்த்தகம் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்தார்.  இந்த நிலையில், இதற்கு இந்தியா பதில் கொடுத்துள்ளது.

அதாவது, பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை என்றால் அது காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் தான் என்றும் இந்தியா மீண்டும் தெளிவுப்படுத்தியது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “பாகிஸ்தானுடனான எங்கள் இருதரப்பு அணுகுமுறை தெளிவாகவும் நிலையானதாகவும் உள்ளது என்பதைக் கூற விரும்புகிறேன்.

ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதிலடி


பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் கைகோர்த்துச் செல்ல முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். பயங்கரவாதத்தை பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை இருக்கும். மேலும், காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சை பற்றி மட்டுமே இருக்கும்” என தெரிவித்தார்.

மேலும், ”சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், மீளமுடியாத வகையிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை கைவிடும் வரை அது நிறுத்தி வைக்கப்படும்” என்றார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.