25 நிமிட தாக்குதல்.. ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி? விளக்கம் கொடுத்த ராணுவத்தினர்!
Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எப்படி நடந்தது உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்துள்ளன்ர.

காஷ்மீர், மே 7 : பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா பதிலடி தாக்குதலை நடத்தியது. 2025 மே 7ஆம் தேதியான இன்று நள்ளிரவில் பாகிஸ்தான் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆபேரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எப்படி நடந்தது உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர்
தொடர்ந்து, வெளியுறவுத்துறை செயலாளர் மிஸ்ரி கூறுஐகயில், “பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் திட்டமிட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியமாகக் கருதப்பட்டது. 15 நாட்கள் கடந்தும், பாகிஸ்தானிடமிருந்து அதன் பகுதியில் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதிகளுடனான பாகிஸ்தானின் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், “பஹல்காம் தாக்குதலுக்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. மே 7ஆம் தேதியான இன்று இரவு 1.05 முதல் 1.30 வரை ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பொதுமக்கள் உயிர் இழப்பதையும் தவிர்க்க இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” என்றார்.
விளக்கம் கொடுத்த ராணுவத்தினர்
#WATCH | #OperationSindoor | Terror site Markaz Subhan Allah, Bahawalpur, Pakistan, the headquarters of Jaish-e-Mohammed, targeted by Indian Armed Forces.” pic.twitter.com/iM4s91ktb8
— ANI (@ANI) May 7, 2025
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இது மிகவும் கொடூரமான சம்பவம். உலகில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது. உலகத்தையும் சர்வதேச தளங்களையும் வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதற்கும் பெயர் பெற்றது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை விசாரித்ததில், பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் பிற நிறுவனங்களின் விசாரணையின் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவமும் குறிவைக்கப்படவில்லை. மேலும், பொதுமக்களும் உயிரிழக்கவில்லை” என்றார். மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தாக்குதல் நடத்திய வீடியோக்கள், புகைப்படங்களை ராணுவத்தினர் வெளியிட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.