அடிக்கடி ரீல்ஸ் செய்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ஷாக் சம்பவம்.. டெல்லியில் பகீர்!
Delhi Murder : தலைநகர் டெல்லியில் ரீல்ஸ் செய்து, வெளியிட்டதற்காக மனைவியை, அவரது கணவர் கொலை செய்துள்ளார். ரீல்ஸ் செய்தது தொடர்பாக, கணவர் மனைவி இருவருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், ஆத்திரத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாதிரிப்படம்
டெல்லி, செப்டம்பர் 04 : டெல்லியில் மனைவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டதற்காக, கணவர் கொலை செய்த (Delhi Murder) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து, பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, தெரிந்த நபர்களே, பெண்களே கொலை செய்து வருகின்றனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், நாள்தோறும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. தென்மேற்கு டெல்லியின் நஜாஃப்கரில் ரோஷன்புரா பகுதியைச் சேர்ந்தவர் அமன்.
இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் தனது தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது மனைவி சமூக ஊடகங்களில் அக்டிவாக இருப்பார். இவரை 6,000 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால், தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் வெளியிட்டு வந்துள்ளார். இதனால், இவர்கள் இரண்டு பேருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. பலமுறை மனைவியை கணவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரீல்ஸ் தொடர்பாக சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.
Also Read : தம்பி மரணத்துக்கு பழிக்குப்பழி.. இளைஞர் தலை துண்டித்து கொலை!
மனைவியை கொன்ற கணவன்
அப்போது, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அமனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம், டெல்லியின் ரோகிணி செக்டர் -17 பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 34 வயது பெண் மற்றும் அவரது வயதான தாயார், அந்தப் பெண்ணின் கணவரால் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
Also Read : மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி.. பிரேத பரிசோதனையில் பகீர்.. சென்னையில் சோகம்!
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)