சமோசா வாங்கிக்கொண்டு வராததால் ஆத்திரம்.. கணவனை கொடூரமாக தாக்கிய மனைவி மற்றும் குடும்பத்தினர்!
Man Beats By His Wife and Her Family | உத்தர பிரதேசத்தில் சமோசா வாங்கிக்கொண்டு வராததால் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஷிவம் என்ற நபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாதிரி புகைப்படம்
பிலிபித், செப்டம்பர் 04 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) சமோசா வாங்கிக்கொண்டு வராததால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவரை குடும்பத்தாரின் உதவியுடன் மிக கடுமையாக தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமோசா வாங்கிக்கொண்டு வராததால் மனைவி தனது குடும்பத்தோடு சேர்ந்து கணவனை தாக்கிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சமோசா வாங்கிக்கொண்டு வராததால் குடும்பத்துடன் சேர்ந்த கணவனை தாக்கிய மனைவி
உத்தர பிரதேச மாநிலம் அனத்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷிவம். இவர் தனது மனைவி, மாமனார், மாமியார் உள்ளிடோரால் மிக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற பஞ்சாயத்தின் போது அவர்கள் இந்த கொடூர செயலை செய்துள்ளனர். ஷிவம் தனது மனைவியின் குடும்பத்தால் கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து எந்த வித புகாரும் அளிக்காத நிலையில், அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது, இந்த சம்பவம் ஆகஸ்ட் 30, 2025 அன்று நடைபெற்ற நிலையில் அவரது தாய் செப்டம்பர் 03, 2025 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : Karnataka: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்.. காதலனை நம்பி சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி
கொலை முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு
ஷிவம் சமோசா வாங்கிக்கொண்டு வராத நிலையில், அடுத்த நாள் அது தொடர்பாக பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. அந்த பஞ்சாயத்தின் போது ஷிவமின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மிக கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் குடும்பமாக இணைந்து தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஷிவமின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் ஷிவமின் மனைவி, அவரது தாய், தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் மீது போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : காதலியின் போன் பிஸி.. விரக்தியில் மின்சார வயர்களை துண்டித்த இளைஞன்..
சமோசா வாங்கிக்கொண்டு வராததால் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து கணவனை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.