பேருந்தில் பாலியல் சீண்டல் செய்ததாக வீடியோ வெளியிட்ட பெண்.. குற்றம்சாட்டப்பட்ட நபர் விபரீதம்!
Man Killed Himself Over Viral Video Stress | பேருந்து கூட்ட நெரிசலில் தன்னை ஒருவர் பாலியல் சீண்டல் செய்ததாக இளம் பெண் வீடியோ வெளியிட்ட நிலையில், அந்த வீடியோவில் இருந்த நபர் அதிக மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கோழிக்கோடு, ஜனவரி 19 : கேரளாவில் (Kerala) பேருந்தில் செல்லும்போது தன்னை ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியதாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் மன உளைச்சளால் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீடியோ வெளியிட்ட இளம் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், வீடியோ வெளியிட்டதால் அந்த நபர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாலியல் சீண்டல் செய்ததாக வீடியோ வெளியிட்ட இளம் பெண்
பேருந்தில் செல்லும்போது, பொது இடங்களில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. சில பெண்கள் இத்தகைய சம்பங்களை கடந்து சென்றுவிடுகின்றனர். சில பெண்களோ அத்தகைய செயல்களை செய்யும் நபர்களை நேருக்கு நேர் கேள்வி கேட்பது, காவல்துறையிடம் பிடித்து கொடுப்பது உள்ளிட்ட தைரியமான செயல்களை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் பரிதாப பலி.. குஜராத்தில் சோக சம்பவம்!
அந்த வகையில், சமீக காலமாக பேருந்தில் பாலியல் சீண்டல் செய்யும் நபர்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதற்காக பெண்கள் சிலர் சம்பவம் நடைபெறும்போது வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் பதிவிட்ட வீடியோவால் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இளம் பெண் வெளியிட்ட வீடியோவால் பறிபோன உயிர்
Kerala man dies by suicide after being accused of sexual misconduct on a bus.
The man was reportedly going through mental stress after the video went viral. pic.twitter.com/7KFcIPOP9X
— The Tatva (@thetatvaindia) January 18, 2026
கேரள மாநிலம், கோவிந்தபுரத்தில் ஜனவரி 16, 2026 அனறு இளம் பெண் ஒருவர் தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். கூட்ட நெரிசல் மிகுந்து இருந்த அந்த பேருந்தில் தீபக் என்ற நபரும் பயணம் செய்துள்ளார். அப்போது தனக்கு அருகில் நின்றுக்கொண்டு இருந்த தீபக், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த இளம் வீடியோ பதிவிட்டுள்ளார். ஆந்த வீடியோவில், அந்த நபர் இளம் பெண்ணின் மார்பகத்தை தனது கையை வைத்து இடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த வீடியோ வெளியாகி கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் பெற்று வந்தது.
இதையும் படிங்க : சட்டவிரோத ஆன்லைன் பந்தய வலைத்தளங்கள்.. ஒரே நாளில் 242 பந்தய வலைத்தளங்களை தடை
இந்த நிலையில், பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ வெளியானது முதலே அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.