பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் பரிதாப பலி.. குஜராத்தில் சோக சம்பவம்!
Kite String Slits 8 Years Old boy's Throat | குஜராத்தில் வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவனின் கழுத்தை பட்டத்தின் மாஞ்சா நூல் அறுத்துள்ளது. இந்த நிலையில், சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
காந்தி நகர், ஜனவரி 17 : குஜராத் (Gujarat) மாநிலம், சூரத் (Surat) மாவட்டம், ஜஹாங்கீர்பாத் பகுதியை சேர்ந்தவர் அமோல் போர்சி. இவரது மகன் ரஹனேஷ். 8 வயதான இந்த சிறுவன் நேற்று (ஜனவரி 16, 2026) தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த சிறுவனுக்கு நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அவரது உயிரையே பறித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து படுகாயமடைந்த சிறுவன்
அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், பட்டம் விட பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தை அறுத்துள்ளது. அதன் காரணமாக சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் மற்றும் சிறுவனின் குடும்பத்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிம் வைத்துள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : குடியரசு தின நிகழ்ச்சி…போர் விமானங்கள் மீது பறவைகள் மோதுவதை தடுக்க 1,275 கிலோ கோழி இறைச்சி வீசும் நிகழ்வு!
சிறுவனின் உயிரை பறித்த மாஞ்சா நூல்
குஜராத்தில் நேற்று மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது பட்டம் விடுவது ஒரு வழக்கமான நிகழ்வாக உள்ளது. அந்த வகையில் நேற்று ஏராளமானவர்கள் பட்டம் விட்டுக்கொண்டு இருந்த நிலையில், பட்டத்தின் மாஞ்சா கயிறு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவனின் கழுத்தை அறுத்து பலத்த காயத்தை ஏற்படுத்தி, உயிரையே பறித்துள்ளது.
இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3.84 கோடி உண்டியல் காணிக்கை!
பட்டம் விட பயன்படுத்தப்படும் மாஞ்சா கயிறு அறுத்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.