Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3.84 கோடி உண்டியல் காணிக்கை!

3.84 Crore Money Box Collection In Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை என தங்களால் முடிந்த காணிக்கைகளை செலுத்துவர். அந்த வகையில், அங்கு ஒரே நாளில் மட்டும் ரூ.3 கோடியே 84 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3.84 கோடி உண்டியல் காணிக்கை!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Jan 2026 08:45 AM IST

திருப்பதி, ஜனவரி 16 : திருப்பதி ஏழுமலையான் கோயில் (Tirupati Elumalaiyan Temple) உலக பிரசித்தி பெற்றதாக உள்ளது. இந்த கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணகான மக்கள் வருகை தருவது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாதாரன நாட்களிலேயே மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3 கோடியே ரூ.84 லட்சம் காணிக்கையாக வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3 கோடியே 84 லட்சம் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முடியை காணிக்கையாக செலுத்துவது, பணம், தங்கம், வெள்ளி என தங்களால் முடிந்தவற்றை காணிக்கையாக செலுத்துவர். இந்த நிலையில், எப்போதெல்லாம் கோயிலுக்கு அதிகப்படியான காணிக்கை வருகிறதோ அப்போதெல்லாம் கோயில் நிர்வாகம் அது குறித்து அறிவிக்கும். தற்போது அத்தகைய ஒரு உண்டியல் வசூல் குறித்து தான் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஜோதி வடிவில் ஐயப்பன்… சபரிமலையில் ஏற்றப்பட்ட மகர ஜோதி…. உணர்ச்சி பெருக்குடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

27 ஆயிரத்து 586 பக்தர்கள் தலைமுடி காணிக்கை

அதாவது, ஜனவரி 15, 2026 அன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 76 ஆயிரத்து 289 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களில் 27 ஆயிரத்து 586 பக்தர்கள் தங்களது தலை முடியை காணிக்கையாக கொடுத்துள்ளனர். இதுதவிர அன்று ஒரு நாள் பக்தர்கள் அதிக அளவிலான பணத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அதாவது, அன்றைய தினம் மட்டும் பக்தர்கள் சுமார் ரூ.3 கோடியே 84 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : ஜன.17ல் அறிமுகமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. ஆரம்பகட்ட டிக்கெட் விலை தெரியுமா? முழு விவரம்!

11 கம்பார்ட்மெண்டுகளில் நிரம்பிய பக்தர்கள்

அன்றைய தினம் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 11 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் குறிப்பிடப்படாத டோக்கன்கள் இல்லாமல் இலசவ தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 16 மணி நேரம் ஆனதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.