கேரளாவை மிரட்டும் மூளையை தின்னும் அமீபா தொற்று.. இதுவரை 19 பேர் பலி.. தடுப்பது எப்படி?
Kerala Brain Eating Amoeba Cases : கேராளவில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2025ஆம் ஆண்டில் இதுவரை 19 பேர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளையை தின்னும் அமீபா
கேரளா, செப்டம்பர் 18 : அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தை உட்பட 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் உயிரிழந்துள்ளனர். கேளராவில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது primary amoebic meningoencephalitis என சொல்லப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இந்த தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்து பலரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, வயநாடு, கோழிக்கோடு, கொல்லம், திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டில் மட்டும் கேராளாவில் 61 பேர் மூளையை தின்னும் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமீபாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், “தீவிதான பொது சுகாதார பிரச்னையை கேரள அரசு எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இல்லாமல், தண்ணீர் நீர் ஆதாரத்துடன் தொடர்புடைய நோய் பரவலை நாங்கள் கண்டறியப்படவில்லை. இந்த தொற்று கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் அதிகமாக பதிவாகி உள்ளது. மூன்று மாத குழந்தை முதல் 91 வயதானவர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கேரளா சட்டப்பேரவையிலும் இந்த நோய் தொற்று குறித்து விவாதம் நடந்தது. எனவே, இந்த நோய் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். இந்த நோயை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். நோய் தடுப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை போன்றவற்றில் கேரளா துல்லியமான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது” என்றார்.
Also Read : நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு.. இரு ரவுடிகள் என்கவுண்டர்.. பரபரப்பில் உத்தரப்பிரதேசம்!
மூளையை தின்னும் அமீபா தொற்று எப்படி பரவுகிறது?
கேரளாவில் பரவி வரும் மூளையை தின்னும் அமீபா தொற்று அரிய வகை நோயாகும். இது அசத்துமான நீரை குடிப்பது மூலம் பரவுகிறது. அசுத்தமான குளம், ஏரிகளில் குளிப்பதன் மூலமும் இந்த நோய் பரவக் கூடும். இது மூக்கின் வழியாக சென்று மூளையில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை அறகுறிகளாக உள்ளன.
ஆனால், மூளைக்காய்சலுக்குமே இதே அறிகுறி தான். இதனை கண்டறிவது கடினம். அதற்குள் இந்த நோயின் தீவிரம் அதிகமாகி, நோயாளிகள் உயிரிழக்கின்றனர். இது பாதிக்கப்ப்டட 10 முதல் 20 நாட்களுக்குள் உயிரிழக்கின்றனர். இதனால், குளங்கள், ஏரிகள், ஆறுகளில் குளிப்பதை தவிர்க்கவும். சுத்திகரிக்கப்பட்ட அல்லது குளோரினேட்டட் செய்யப்பட்ட தண்ணீரை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
Also Read : இது என்ன புதுசா இருக்கு? மனிதர்களை கடிக்கும் தெரு நாய்க்கு ஆயுள் தண்டனை.. வினோத உத்தரவு
அதிகரிக்கும் பாதிப்பு
கேரளாவில் முதல்முறையாக 2016ஆம் ஆண்டு மூளையை தின்னும் அமீபா தொற்று கண்டறியப்பட்டது. 2023ஆம் ஆண்டு வரை கேரளாவில் 8 பேர் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டு மூளையை தின்னும் அமீபா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தன. 2024ஆம் ஆண்டு 36 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 9 பேர் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தன. 2025ஆம் ஆண்டு இதுவரை 69 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், 19 பேர் உயிரிழந்தன்ர. கிட்டதட்ட 100 சதவீத இந்த நோய் அதிகரித்துள்ளது.