ஐயப்பன் பகடி பாடல் அவமதிப்பு…3 பேர் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு!
Insulting Ayyappa Parody Song: கேரளாவில் ஐயப்பனின் பிரபலமான பகடி பக்தி பாடலை அவமதித்ததாக வெளிநாட்டு எழுத்தாளர் உள்பட 3 பேர் மீது அந்த மாநில இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஐயப்பன் பகடி பாடல் அவமதிப்பு வழக்கு
கேரள மாநிலம், பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு ஐயப்பனின் ஆபரணங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் பாரம்பரிய பாதையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திருவாபரணபாத சம்ரக்ஷ்ண சமிதியின் பொதுச் செயலாளர் பிரசாத் குழிக்கலா இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான சம்பவத்தைத் தொடர்ந்து, ஐயப்பனின் பிரபலமான பக்தி பாடலான பகடி பாடலை சிலர் பாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவின் மூலம் மத நம்பிக்கையை அவர்கள் அவமதித்துள்ளனர். இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டி உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பேரில், போலீசார் மூன்று பேர் மீதும், ஒரு நிறுவனத்தின் பெயர் மீதும் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு எழுத்தாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
அதன்படி, அந்த எஃப் ஐ ஆரில், கத்தார் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு எழுத்தாளர் ஜி. பி. குன்ஹாப்துல்லா சலப்புரம், பாடகர் டேனிஷ் முகமது, அந்த வீடியோவை படமாக்கிய சி. எம். சி. மீடியா மற்றும் வீடியோவை தயாரித்த சுபைர் பந்தலூர் ஆகியோர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 299 ( மத உணர்வுகளை சீர்குலைத்தல்) மற்றும் 353 (1) சி ( குழுக்களை மோதலுக்கு தூண்டுதல் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்க இலக்கு வைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க: டெல்லியை கலங்கடிக்கும் காற்று மாசு.. புது ரூல்ஸை கொண்டு வந்த டெல்லி அரசு!
ஐயப்பன் பாடல் – சரண மந்திரம் அவமதிப்பு
மத உணர்வுகளை தூண்டும் மற்றும் மத குழுக்களை மோதலுக்கு தூண்டும் நோக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகடி பாடலை உருவாக்கியதாக முதல் தகவல் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஐயப்ப பக்தி பகடி பாடல் மற்றும் சரண மந்திரத்தை அவமதித்ததாகவும், பாடலை சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் மூலம் பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், நாட்டின் பல்வேறு குரல்களையும், படைப்பு வெளிப்பாடுகளையும் அடக்கும் சங்பரிவார்கள் ஆட்சியின் சர்வாதிகார ஆட்சியை இந்தச் சம்பவம் பிரதிபலிப்பதாக கூறினார்.
சிபிஐ-காங்கிரஸ் கட்சிகள் கண்டனம்
இதே போல, சிபிஐ (எம்) கட்சியானது பகடி பாடலுக்கு பயப்படுவதாகவும், இதற்கு முன்பு ஐயப்ப பக்தி பாடல்களுக்கு பிறகு பகடி பாடல்கள் இசைக்கப்பட்டதாக காங்கிரஸ் சுட்டிக்காட்டியது. அதாவது, சிபிஐ (எம்) ஆதரவு பெற்ற கைரலி தொலைக்காட்சி நடிகர்களான நாதிர்ஷா மற்றும் மறைந்த கலாபவன் மணி பாடிய பகடி பாடலிலும் ஒளி பரப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: இனி மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சுங்கச்சாவடிகளை கடக்கலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!