Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Golden Temple : பொற்கோயில் மீது குறி வைத்த பாகிஸ்தான்.. இந்தியா கொடுத்த ஷாக் ரிப்ளை.. ராணுவம் பகிர்ந்த விஷயம்!

Golden Temple Was Saved from Drone Attacks | பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே சில நாட்கள் போர் நிலவிய நிலையில், முக்கிய பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் அனைத்து சதிகளையும் முறியடித்து உள்ளது. தற்போது அது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Golden Temple : பொற்கோயில் மீது குறி வைத்த பாகிஸ்தான்.. இந்தியா கொடுத்த ஷாக் ரிப்ளை.. ராணுவம் பகிர்ந்த விஷயம்!
இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 20 May 2025 11:17 AM

சென்னை, மே 20 : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடர்ந்து ஒரு சில நாட்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நிலவியது. இதில், பாகிஸ்தான் இந்தியாவின் தங்க கோயிலை (Golden Temple) தகர்க்க திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்திய ராணுவம், பாகிஸ்தானின் அந்த சதியை முறியடித்துள்ளது. இந்த நிலையில், ராணுவ அதிகாரி கார்திக் சி சேஷாஸ்திரி பொற்கோயில் நோக்கி ஏவப்பட்ட பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் எவ்வாறு தகர்க்கப்பட்ட என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய கடும் மோதல்

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீர் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், கடும் கோபம் கொண்ட இந்தியா பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க முடிவு செய்தது. அதன்படி ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே சில நாட்கள் போர் நீடித்தது.

பொற்கோயிலை குறிவைத்த பாகிஸ்தான் – சதியை முறியடித்த இந்திய ராணுவம்

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலின் போது பாகிஸ்தான், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற புனித தளமான தங்க கோயிலை தாக்க முயன்றுள்ளது. இந்த நிலையில் இது குறித்து கூறியுள்ள ராணுவ அதிகாரி கார்திக் சி சேஷாஸ்திரி, பாகிஸ்தானிடம் முறையான தாக்குதல் திட்டம் இல்லை என்பது தெரியும். அவர்கள் ராணுவ தளவாடங்கள், பொதுமக்கள் மற்றும் புனித தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவார்கள் என நாங்கள் முன்கூட்டியே கணித்திருந்தோம்.

இதில் தங்க கோயில் முக்கியமானதாக கருதபட்ட நிலையில், அதற்கு குடை பாதுகாப்பு அளித்திருந்தோம். அதேபோல பாகிஸ்தான் பொற்கோயில் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றது. நாங்கள் இதற்கு முன்னேற்பாடாக இருந்தோம். அதன்படி, தங்க கோயிலில் சிறு கீறல்கள் கூட ஏற்படாமல் பாகிஸ்தானின் சதியை முறியடித்தோம் என்று கூறியுள்ளார்.

திருமண தடை நீக்கும் முருகன்.. வெற்றி வேலாயுத சுவாமி கோயில்!
திருமண தடை நீக்கும் முருகன்.. வெற்றி வேலாயுத சுவாமி கோயில்!...
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்த லப்பர் பந்து இயக்குநர்!
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்த லப்பர் பந்து இயக்குநர்!...
Accept All ? Reject All ? குக்கீஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!
Accept All ? Reject All ? குக்கீஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!...
பிளேஆஃப் பந்தயத்தில் மும்பையை முந்துமா டெல்லி? யாருக்கு வாய்ப்பு?
பிளேஆஃப் பந்தயத்தில் மும்பையை முந்துமா டெல்லி? யாருக்கு வாய்ப்பு?...
விஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?
விஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?...
ரஜியினின் ஜெயிலர் 2 படத்தில் குவியும் மலையாள பிரபலங்கள்!
ரஜியினின் ஜெயிலர் 2 படத்தில் குவியும் மலையாள பிரபலங்கள்!...
சமையலில் தொடர்ந்து சொதப்பலா..? இதை செய்தால் சுவை இரட்டிப்பாகும்!
சமையலில் தொடர்ந்து சொதப்பலா..? இதை செய்தால் சுவை இரட்டிப்பாகும்!...
ஆட்டோகிராஃப் படத்தில் அந்த முன்னணி நடிகர் நடிப்பதாக இருந்தது...
ஆட்டோகிராஃப் படத்தில் அந்த முன்னணி நடிகர் நடிப்பதாக இருந்தது......
அன்று இலவசம்.. இன்று கோடியில் மதிப்பு.. பதஞ்சலி தந்த் காந்தி கதை!
அன்று இலவசம்.. இன்று கோடியில் மதிப்பு.. பதஞ்சலி தந்த் காந்தி கதை!...
SIP : தினமும் 100 ரூபாயில் முதலீடு செய்யலாம் - என்ன நன்மைகள்?
SIP : தினமும் 100 ரூபாயில் முதலீடு செய்யலாம் - என்ன நன்மைகள்?...
சீரடியில் சாய்பாபா நிகழ்த்திய அதிசயம்.. போஸ் வெங்கட் அனுபவங்கள்!
சீரடியில் சாய்பாபா நிகழ்த்திய அதிசயம்.. போஸ் வெங்கட் அனுபவங்கள்!...