உருகும் இமயமலை பனிப்பாறைகள்.. தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்.. வெளியான பகீர் கணிப்புகள்

Hindu Kush Himalaya : இந்து குஷ் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் 75 சதவீதம் உருகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உருகும் வேகம் அதிகரித்தால், 2,100ஆம் ஆண்டில் இந்து குஷ் இமயமலையே இருக்காது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

உருகும் இமயமலை பனிப்பாறைகள்.. தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்.. வெளியான பகீர் கணிப்புகள்

மாதிரிப்படம்

Updated On: 

31 May 2025 12:32 PM

 IST

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பெரும் பிரச்னைகளை சந்தித்து வரும் சூழலில், இமயமலையில் (Hindu Kush Himalaya) உள்ள பனிப்பாறைகள் உருகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மக்களுக்கு முக்கியமான நீர் ஆதாரமான இந்து குஷ் இமயமலையில் உள்ள 75 சதவீத பனிப்பாறைகள் உருகிவிடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உருகும் வேகம் அதிகரித்தால் 2,100ஆம் ஆண்டில் இந்து குஷ் இமயமலையே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. அதிக அளவில் மழை பொழிவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிமாக இருப்பதற்கும், நிலச்சரிவு, பூகம்பம் போன்றவைக்கு காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உருகும் இமயமலை பனிப்பாறைகள்

இந்த காலநிலை மாற்றத்தால் உயிரிழப்புகளும், பொருளாதார சிக்கல்களும் உலக நாடுகளில் ஏற்படுகின்றன. இப்படியான சூழலில், ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதாவது, இந்து குஷ் இமயமலையில் உள்ள 75 சதவீத பனிப்பாறைகள் உருகிவிடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இதுபோன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.7 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்தால் உலகளவில் உள்ள பனிப்பாறைகளில் கால் பகுதி மட்டும் எஞ்சியிருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆல்ப்ஸ், மேற்கு அமெரிக்கா, கனடாவில் ராஞ்சி மலைகள் போன்றவை பாதிக்கப்படும் என்றும் இந்த இடங்களில் பனிப்பாறைகள் அனைத்தும் உருகிவிடும் என கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் இருந்தால், இமயமலை 40 முதல் 45 சதவீதம் பாதிக்கப்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான பகீர் கணிப்புகள்


இதுபற்றி வல்லுநர்கள் பேசுகையில், “பனிப்பாறைகள் உருகுவது மனிதர்களை அச்சுறுத்துகிறது. ஆசியாவில் 2 பில்லியனுக்கு அதிகமாக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் வறட்சி, கடல் மட்ட உயர்வு, அதிக வெள்ளத்தால் எதிர்காலத்தில் பாதிக்கப்படும்” என்றனர்.

1975 ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் 9,000 ஜிகாடன் உருகியதாக உலக வானிலை ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இதனால், தண்ணீர் பஞ்சம், விவசாயம் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.  சமீபத்தில் கூட, சுவிட்சர்லாந்தின் பிளாட்டன் கிராமம் பனிப்பாறை சரியால் அழிந்துள்ளது.

விஞ்ஞானிகள் முன்னறிவிப்பால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இதுஒரு பக்கம் இருக்க, வெப்பநிலையால் உலக நாடுகள் பெரும் பிரச்னைகளை சந்திக்கும் என உலக வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை தாண்டுவதற்கு 80 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால், வறட்சி, அதிக மழை பொழிவு, பனிப்பாறைகள் உருகும் என  உலக  வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்