பக்தர்களே திருப்பதி போறீங்களா? இனி பாஸ்டேக் கட்டாயம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

Tirupati Fastag Mandatory : திருப்பதி செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அலிபிரி சுங்கச்சாவடிகளில் நெரிசலை குறைக்க தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்களே திருப்பதி போறீங்களா? இனி பாஸ்டேக் கட்டாயம்..  வெளியான முக்கிய அறிவிப்பு

திருப்பதி கோயில்

Updated On: 

13 Aug 2025 07:35 AM

திருப்பதி, ஆகஸ்ட் 13 : திருப்பதி செல்லும் (Tirumala Tirupati) வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. உலகின் 2வது பணக்கார கடவுளாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையானை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் திருப்பதி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், விஷேச தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் நிலையில், ஆந்திர மாநில அரசு, திருப்பதி தேவஸ்தானம் ஆகியவை இணைந்து பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி தொடங்கி அடிப்படை வசதிகளை சரியாக நிறைவேற்றி வருகிறது.

இப்படியான சூழலில், திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் பாஸ்டேக் கட்டாயம் எடுக்க வேண்டும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 15 முதல் அலிபிரி டோல்கேட் வழியாக திருமலைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அலிபிரி சோதனைச் சாவடியில் பல்வேறு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்.

Also Read : தெரு நாய்களை 8 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

திருப்பதி செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்


சுங்கச்சாவடிகளில் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் ஏற்படும் நெரிசலை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 15 முதல் FASTag இல்லாத வாகனங்கள் திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. தங்கள் வாகனங்களுக்கு FASTag இல்லாதவர்களின் வசதிக்காக அலிபிரி சோதனைச் சாவடியில் FASTag வழங்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் போக்குவரத்து கட்டணங்கள் பாஸ்டேக் மூலம் மட்டுமே வசூலிக்கப்படும். பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது என தெரிவித்துள்ளது.

திருமலைக்கு இரண்டு பாதைகள் உள்ளன. வாகனத்தை பொறுத்தவரை, அலிபிரி மட்டுமே திருமலைக்கு நுழைவாயிலாக உள்ளது. திருமலை செல்லும் வாகனங்களுக்கு அலிபிரி டோல்கேட்டில் தான் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் அலிபிரி டோல்கேட் வழியாக திருமலைக்குள் 8000 வாகனங்கள் நுழைகின்றன. 

Also Read : செங்கோட்டை சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் முக்கியமான பண்டிகை காலங்களில் சுமார் 12000-15000 வாகனங்கள் திருமலைக்குச் செல்கின்றன. இதனால், அலிபிரி சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால், பக்தர்களின் தரிசன நேரம் பாதிக்கப்படுகிறது. இதனால், தேவஸ்தானம் பாஸ்டேக்கை கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.