Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

FASTag Annual Pass 2025: FASTag வருடாந்திர பாஸை யார் பயன்படுத்தலாம்..? நிபந்தனைகள் என்னென்ன..?

National Highways Toll: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள FASTag வருடாந்திர பாஸ் மூலம், தனியார் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம். ரூ.3000 செலுத்தி ராஜ்மார்க்யாத்ரா ஆப் அல்லது NHAI வலைதளம் மூலம் பெறலாம்.

FASTag Annual Pass 2025: FASTag வருடாந்திர பாஸை யார் பயன்படுத்தலாம்..? நிபந்தனைகள் என்னென்ன..?
FASTag வருடாந்திர பாஸ்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Aug 2025 20:41 PM

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கடந்த 2025 ஆகஸ்ட் 15ம் தேதி FASTag வருடாந்திர பாஸை (FASTag Annual Pass) அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், தனியார் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவு சாலைகளில் ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் வரை, எது முதல் நிகழ்கிறதோ அதுவரை எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லா பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த பாஸ் பெற, வாகன உரிமையாளர்கள் 2025 – 26 அடிப்படை ஆண்டிற்கு ரூ. 3000 செலுத்த வேண்டும். இதை ராஜ்மார்க்யாத்ரா மொபைல் செயலி அல்லது NHAI வெப்சைட் மூலம் பணம் செலுத்தலாம். பணம் செலுத்தியவுடன் வருடாந்திர பாஸ் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இதை எங்கே, எப்படி பயன்படுத்தலாம்..?

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவு சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டுமே இந்த பாஸ் செல்லுபடியாகும். மாநில நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் அல்லது மாநிலத்தால் நிர்வகிக்கப்படும் விரைவு சாலைகள் போன்ற பிற இடங்களில், FASTag ஒரு சாதாரண FASTag போலவே செயல்படுகிறது. அதன்படி, வழக்கமான சுங்க கட்டணங்கள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: மும்பையில் விநாயகரச் சதுர்த்தி கொண்டாட்டம்…ரூ.474 கோடிக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு

வருடாந்திர பாஸ் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்..?


வாகன ஓட்டிகள் புதிய டேக் வாங்க தேவையில்லை. மாறாக இது உங்கள் தற்போதைய FASTag உடன் இணைக்கப்படும். இதன் நிபந்தனை என்னவென்றால், உங்கள் தற்போதைய FASTag செயலில் இருக்க வேண்டும். மேலும், உங்கள் வாகனப் பதிவு எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். இந்த திட்டம் NHAI, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளில் மட்டுமே பொருந்தும். ஆன்லைனில் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இது தினசரி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த பாஸ் மாற்றத்தக்கது அல்ல. பதிவு செய்யப்பட்ட வாகனங்களுடன் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

இந்த பாஸ் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 1 வருடம் அல்லது 200 பயணங்கள் வரை, எது முதலில் நடக்கிறதோ அதுவரை செல்லுபடியாகும். இதுபோன்ற அப்டேட்களை பெற, நீங்கள் வருடாந்திர பாஸை அப்டேட் செய்ய வேண்டும். டோல் பிளாசாக்களில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதன் மூலமும், நெரிசலை குறைப்பதன் மூலமும், சர்ச்சைகளை குறைப்பதன் மூலமும், மில்லியன் கணக்கான தனியார் வாகன உரிமையாளர்களுக்கு விரைவான மற்றும் எளிதான பயண அனுபவத்தை வழங்குவதே வருடாந்திர பாஸ் நோக்கமாகும்.

ALSO READ: ஒரே சார்ஜில் 500 கி.மீ.. பிரதமர் மோடி தொடங்கி வைத்த சூப்பர் கார்.. 100 நாடுகளுக்கு ஏற்றுமதி!

இதை யார் பயன்படுத்தலாம்..?

கார்கள், ஜீப்புகள் அல்லது வேன்கள் போன்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேநேரத்தில், வணிக வாகனங்களுக்கு இது அனுமதிக்கப்படாது. ஒரு வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு, மற்றொரு வாகனத்தில் பயன்படுத்தப்பட்டால் எந்த வார்னிங்கும் இல்லாமல் பாஸ் உடனடியாக ரத்து செய்யப்படும்.