இரட்டை கொலையில் முடிந்த கள்ளக்காதல்.. டெல்லியில் பரபரப்பு சம்பவம்!
Double Murder Due in Illicit Relationship | டெல்லியில் கணவரை குடும்ப தகராறில் சில நாட்கள் பிரிந்து வாழ்ந்த மனைவிக் வேறு ஒருவருடன் பழகியுள்ளார். அந்த பெண் பிறகு மீண்டும் தனது கணவருடன் இணைந்த நிலையில், காதல் செய்த தகராறில் காதல் மற்றும் அந்த பெண் பலியாகியுள்ளனர்.

மாதிரி புகைப்படம்
புதுடெல்லி, அக்டோபர் 20 : டெல்லியில் (Delhi) உள்ள ராம் நகர் என்ற பகுதியில் ஆகாஷ் என்ற 23 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இ ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி 22 வயதில் ஷாலினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கணவனை பிரிந்து ஷாலினி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு ஆசு என்ற 34 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கணவரை பிரிந்து வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த பெண்
ஷாலினிக்கும் அவரது கணவருக்கும் இடையே நிலவி வந்த சிக்கல் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக இருவரும் ஒன்றாக வசிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், ஷாலினி கர்ப்பமாக இருக்கிறார் என்றும் அந்த குழந்தை தன்னுடையது தான் என்றும் ஆசு கூறியுள்ளார். ஆனால், ஷாலினியோ அது தனது கணவர் ஆகாஷின் குழந்தை என கூறியுள்ளார். ஏற்கனவே ஷாலினி தனது கணவருடன் இணைந்த கோபம் இருந்த நிலையில், தனது குழந்தை இல்லை என கூறியது ஆசுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கொட்டாவியால் இளைஞருக்கு வந்த சிக்கல்.. மீண்டும் வாயை மூட முடியாமல் அவதி!
கணவன் – மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய ஆசு
இந்த சிக்கல்களுக்கு மத்தியில் ஷாலினி தனது தாய் வீட்டிற்கு கணவருடன் சென்றுள்ளார். நேற்று இரவு வீட்டின் அருகே சென்றபோது அங்கு வந்த ஆசு, ஆகாஷ் மீது கத்தியால் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். அதனை சுதாரித்துக்கொண்ட ஆகாஷ் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், இ ரிக்ஷாவில் ஷாலினி இருப்பதை கண்ட ஆசு அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அதனை தடுக்க முயன்ற ஆகாஷையும் அவர் குத்தியுள்ளார்.
இதையும் படிங்க : ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. அடித்துச் செல்லப்பட்ட வேன்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
கத்தி குத்தில் ஆசு, ஷாலி உயிரிழந்த சோகம்
அப்போது கத்தியை பிடுங்கி ஆசுவை ஆகாஷ் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அகாஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் ஆசு ஆகியோரை ஷாலினியின் சகோதரர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆசு மற்றும் ஷாலினி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் படுகாயமடைந்த ஆகாஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.