India COVID-19 Cases: கேரளாவில் கொடூர ஆட்டம்! இந்தியாவில் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. எகிறும் உயிரிழப்புகள்..!
Coronavirus Cases in India Explode: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,783 ஆக உயர்ந்துள்ளது. கேரளா (1400), மகாராஷ்டிரா (485), டெல்லி (436) ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்பு. கடந்த 9 நாட்களில் பாதிப்பு 14 மடங்கு அதிகரித்துள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். மிசோரத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. LF.7, XFG, JN.1, NB.1.8.1 என நான்கு புதிய வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் சோதனை
டெல்லி, ஜூன் 1: இந்தியாவில் கொரோனா வைரஸால் (Corona Virus) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,783ஐ எட்டியுள்ளது. மத்திய சுகாராதத் துறை (Ministry of Health) வெளியிட்ட தகவலின்படி, கடந்த 2025 மே22ம் தேதி இந்தியா முழுவதும் 257 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். கடந்த 9 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்புகள் சுமார் 14 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கேரளாவில் (Kerala) அதிகபட்சமாக 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் 485 பேரும், தலைநகர் டெல்லியில் 436 பேரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்:
கடந்த 2025 ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றால் 28 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. முன்னதாக, கடந்த 2025 மே 30ம் தேதி காலை 8 மணி வரை 7 பேர் இறப்புகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், கடந்த2 நாட்களில் 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
2025 மே 31ம் தேதியான நேற்று பெங்களூருவில் 63 வயதான முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவருக்கு ஏற்கனவே 2 தடுப்பூசிகளுடன், ஒரு பூஸ்டர் டோஸூம் செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், டெல்லியில் 60 வயதான முதியவரும், மகராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
7 மாதங்களுக்கு பிறகு முதல் பாதிப்பு:
రాష్ట్రాల వారీగా కోవిడ్ -19 కేసులు June 1st 2025#Covid #India pic.twitter.com/SVZQrtde2k
— Sakshi (@sakshinews) June 1, 2025
மிசோரமில் கடந்த 2026 மே 30ம் தேதி 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மிசோரத்தில் கடைசியாக 7 மாதங்களுக்கு முன்புதான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மிசோரத்தில் கடைசியாக கடந்த 2024 அக்டோபர் மாதம் 73 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
4 புதிய வகை கொரோனா தொற்று கண்டிபிடிப்பு:
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 4 புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை LF.7, XFG, JN.1 மற்றும் NB.1.8.1 தொடர்களைச் சேர்ந்தவை என்றும் ICMR இயக்குனர் டாக்டர் ராஜீவ் பாஹ்ல் கூறினார்.
எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்புகள்..?
கேரளா, மகாராஷ்டிராவை தொடர்ந்து, குஜராத்தில் 320 பேரும், மேற்கு வங்கத்தில் 287 பேரும், கர்நாடகாவில் 238 பேரும், தமிழ்நாட்டில் 199 பேரும், உத்தர பிரதேசத்தில் 149 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் எங்கு எவ்வளவு பாதிப்புகள்..?
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 82 பேரும், கேரளாவில் 64 பேரும், டெல்லியில் 61 பேரும், குஜராத்தில் 55 பேரும், உத்தரபிரதேசத்தில் 32 பேரும், மகாராஷ்டிராவில் 18 பேரும், தமிழ்நாட்டில் 14 பேரும் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.