Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இந்தியக் கூட்டணி? முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..

Vice President Election: துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும்படி பேசியுள்ளார்.

சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இந்தியக் கூட்டணி? முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Aug 2025 13:26 PM

டெல்லி, ஆகஸ்ட் 18. 2025: துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் தனது உடல் நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யாராக இருக்கும் என பல்வேறு யூகங்கள் வெளியானது. இதில் பல பெயர்களும் இடம்பெற்றது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆகஸ்ட் 17 2025 தேதியான நேற்று மாலை பாஜக தரப்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. இராதாகிருஷ்ணனை அறிவித்தது. துணை ஜனாதிபதி தேர்தல் என்பது 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது அதை நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் இதற்கான வேட்பு மனு தாக்கல் துவங்கி நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணனை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடம் பேசியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்:

நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் 35 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் அதேபோல் அவர் எந்த அரசியல் பதவியிலும் இருக்க கூடாது. அந்த வகையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவித்துள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருவதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நவீன் பட்நாயக், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதாவது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் துணை ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரவளித்து சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் துணை ஜனாதிபதி தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராஜ்நாத் சிங்கின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேர்தல் முகவராக செயல்படுவார் என்றும் அரசியல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் இந்திய கூட்டணி தலைவர்கள் கூடி தங்கள் நிலைப்பாடு குறித்து விவாதித்த தங்கள் வேட்பாளரை முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சி.பி ராதகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் – மாணிக்கம் தாக்கூர்:


இது தொடர்பாக பேசிய அவர், “ இந்திய கூட்டணி தலைவர்கள் கூடி எங்கள் நிலைப்பாடு மற்றும் வேட்பாளர் குறித்து முடிவு செய்வார்கள். சி.பி. ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் அந்த ஆர்.எஸ்.எஸ் பேட்ஜை பெருமையுடன் அணிந்துள்ளார்.

அவர் தமிழ்நாட்டின் எம்பி ஆகவும் தமிழ்நாட்டின் பாஜக தலைவராகவும் இருந்துள்ளார் எனவே அவருக்கு தமிழ்நாட்டுடன் தொடர்புகள் உள்ளன. மேலும் அவர் மகாராஷ்டிராவின் ஆளுநராக உள்ளார். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் தொடர்புகளை மறக்க முடியாது ” என தெரிவித்துள்ளார்