YEAR ENDER 2025: கிராமப்புற மேம்பாட்டுக்கு படிக்கல்லான ஜல் ஜீவன் திட்டம்!
Jal Jeevan Mission For Rural Development: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டமானது ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித் தனி குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்கள் மேம்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களின் கல்வி பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

Jal Jeevan
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டமானது கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 2024- ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்குவது இதன் முக்கிய நோக்கம் ஆகும். இந்தியாவில் உள்ள மாநில நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டம் ஒவ்வொரு கிராமப் பகுதிகளில் உள்ள குடும்பத்துக்கு தேவையான அளவு மற்றும் தரமான குடிநீரை தனி இணைப்பு மூலம் வழங்கும். இதன் மூலம் பொது மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதுடன், தண்ணீர் மூலம் பரவும் நோய்களும் குறையும். இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. குறிப்பாக கிராமப் புறங்களில் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
குடிநீர் மூலம் பரவும் நோய்கள்
இவ்வாறு ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித் தனி குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுவதால் குடிநீர் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வெகு தொலைவுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுக்க செல்லும் நேரம் குறைவதுடன், அவர்களின் கல்வி மற்றும் பிற வேலைகள் தடைபடுவது தடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க: ChatGPT பயன்படுத்த வேண்டாம் என ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. ஷாக் தகவல்..
வீடுகளுக்கு தனித் தனி குடிநீர் இணைப்பு
இந்தத் திட்டம் குறித்து தமிழ்நாடு மாநில திட்ட குழு போன்ற அமைப்புகள் மதிப்பீடு செய்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமப்புற வீடுகளுக்கு தனி குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி முடிப்பதற்கு மத்திய அரசு பெரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது ஊரகப்பகுதி வீடுகளுக்கு போதிய அளவில் பரிந்துரைக்கப்பட்ட தரம் மற்றும் வழக்கமான, நீண்ட கால அடிப்படையில் குடிநீர் வழங்கி வருகிறது.
கிராமப்புறத்தின் மேம்பாட்டுக்கு முக்கிய படிக்கல்
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தற்போது உள்ள வழிகாட்டுதலின்படி, இந்திய தர நிர்ணய ஆணையத்தின் தர நிலைகள், குழாய் மூலம் குடிநீர் வளங்கள் திட்டங்கள் மூலம் விநியோகிக்கப்படும் நீரின் தரத்துக்கான அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குடிநீரானது மாநில பட்டியலில் இருப்பதால் ஜல் ஜீவன் இயக்கத்தில் உள்ள செயல்பாடுகள் உள்ளிட்டவை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த திட்டமானது கிராமப் புறத்தின் மேம்பாட்டுக்கு ஒரு முக்கிய படிக்கலாகும்.
மேலும் படிக்க: 99% மாவட்டங்களில் 5G சேவை.. தொலைத்தொடர்பில் மத்திய அரசின் புதிய சாதனை..