செல்போன் வேண்டும் என்றால் முத்தம் கொடு.. பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனர்!
Bus Cleaner Arrested | ஐதராபாத்தில் இருந்து பெங்கள்ரூருக்கு இரவில் பேருந்தில் 16 வயது சிறுமி தனியாக பயணம் செய்துள்ளார். அதனை அறிந்துக்கொண்ட பேருந்தில் கிளீனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமியின் குடும்பத்தினர் கிளீனரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மாதிரி புகைப்படம்
பெங்களூரு, செப்டம்பர் 12 : ஐதராபாத்தில் (Hyderabad) இருந்து பெங்கரூருக்கு பேருந்தில் சென்ற 16 வயது சிறுமியிடம் அந்த பேருந்தின் கிளீனர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு தனியாக வீடு திரும்பிய நிலையில், இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமி அளித்த தகவலின்படி பேருந்து நிலையத்திற்கு வந்த குடும்பத்தினர், கிளீனரை சரமாரியாக தாக்கி காவல்துறையிடம் ஒப்படைந்த்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனர்
கர்நாடக மாநிலம் பெங்களுருவை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அவரது அக்கா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அக்கா வீட்டிற்கு சென்றிருந்த சிறுமி செப்டம்பர் 10, 2025 அன்று ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு இரவில் தனியாக பேருந்தில் பயணம் செய்துள்ளார். சிறுமியின் அக்கா பேருந்து நிலையத்திற்கு வந்து அவரை பேருந்தில் ஏற்றிவிட்டுச் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க : நள்ளிரவில் பிரிட்ஜில் இருந்த பச்சிளம் குழந்தை.. தாய் செய்த செயல்.. அடுத்து நடந்த ஷாக்!
இந்த நிலையில், சிறுமி தனியாக பயணம் செய்வதை அறிந்துக்கொண்ட அந்த பேருந்தின் கிளீனர், ஜன்னல் ஸ்கிரீனை மூடுவது போல சிறுமியின் உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி செல்போன் மூலம் தனது தாயிடம் கூறியுள்ளார். இதற்கிடையே சிறுமியின் செல்போன் சுவிட்ஸ் ஆஃப் ஆகியுள்ளது. இந்த நிலையில், சிறுமி டிரைவரிடம் செல்போனை கொடுத்து சார்ஜ் போட கூறியுள்ளார். அதன்படி, டிரைவர் சார்ஜ் போட்ட நிலையில், செல்போனை எடுக்க சிறுமி சென்றுள்ளார்.
செல்போன் வேண்டும் என்றால் முத்தம் கொடு என கேட்ட கிளீனர்
சிறுமி செல்போன் எடுக்க போவதை கண்ட கிளீனர், செல்போன் வேண்டும் என்றால் தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என பலமுறை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் டிரைவரிடம் இருந்து செல்போனை வாங்கிய அந்த சிறுமி, உடனடியாக தனது அண்ணனிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் உறவினர்கள் அந்த பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு சென்ற அவர்கள் பேருந்தில் இருந்து கிளீனரை கீழே இறக்கி அவரது ஆடைகளை களைந்துள்ளனர்.
இதையும் படிங்க : டயரில் எலுமிச்சை வைத்து சடங்கு… கீழே விழுந்து நொறுங்கிய புத்தம் புது மஹிந்திரா தார் கார்! – வைரல் வீடியோ
பின்னர் ஊர் மக்கள் கண்முன் வைத்து அந்த நபரை மிக கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிளீனரை கைது செய்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கிழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.