AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஹைதராபாத் பாக்யலட்சுமி அம்மன் கோயிலில் அமித் ஷா சிறப்பு வழிபாடு! காங்கிரஸை கடுமையாக விமர்சித்து இன்று பிரம்மாண்ட பேரணி!

ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் வந்திறங்கிய அமித் ஷாவை, மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து நேரடியாக பழைய ஹைதராபாத் பகுதிக்குச் சென்ற அமித் ஷா, வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பாக்யலட்சுமி அம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

ஹைதராபாத் பாக்யலட்சுமி அம்மன் கோயிலில் அமித் ஷா சிறப்பு வழிபாடு! காங்கிரஸை கடுமையாக விமர்சித்து இன்று பிரம்மாண்ட பேரணி!
ஹைதராபாத் பாக்யலட்சுமி அம்மன் கோயிலில் அமித் ஷா சிறப்பு வழிபாடு!
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Nov 2026 16:10 PM IST

நவம்பர் 2, 2026: ஹைதராபாத்தில் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார் அருகே அமைந்துள்ள பாக்யலட்சுமி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அமித் ஷாவின் இந்தப் பயணம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்யலட்சுமி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் வந்திறங்கிய அமித் ஷாவை, மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து நேரடியாக பழைய ஹைதராபாத் பகுதிக்குச் சென்ற அமித் ஷா, வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பாக்யலட்சுமி அம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

மேலும் படிக்க: இந்தியா கூட்டணி நடத்தும் பிரம்மாண்ட பேரணி.. 4000 போலீசார் பாதுகாப்பு… 200 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு!

அவரது வருகையை முன்னிட்டு பழைய ஹைதராபாத் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. வழிபாட்டை முடித்துக்கொண்ட அமித் ஷா, பின்னர் காகத்தியா ஹோட்டலுக்குச் சென்று சிறிது நேரம் தங்கினார்.

அம்மனை தரிசித்தது எனது அதிர்ஷ்டம் – அமித் ஷா

பாக்யலட்சுமி அம்மன் கோயிலில் வழிபாடு செய்தது குறித்து அமித் ஷா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ பாக்யலட்சுமி அம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டதை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். மக்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்று லட்சுமி தேவியிடம் மனதாரப் பிரார்த்தனை செய்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸை கடுமையாக விமர்சித்த அமித் ஷா!

ஹைதராபாத் பயணத்தின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்து அமித் ஷா கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, அந்தத் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் வன்முறை மற்றும் அராஜக வழிகளைக் கையாண்டு ஜனநாயகத்தை ஒடுக்கி மீண்டும் அதிகாரத்திற்கு வர முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க: டெல்லியில் எதிரெதிர் போராட்டங்கள்.. இந்தியக் கூட்டணியின் மாபெரும் பேரணி.. பாஜகவின் எதிர் போராட்டம்!

இத்தகைய சதித்திட்டங்களை முறியடித்து அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைப் பாதுகாப்பதற்காகவே ஹைதராபாத்தில் குரல் எழுப்ப வந்துள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட பேரணி – அமித் ஷா பங்கேற்பு!

திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின்படி, மாலை 4 மணிக்கு நிஜாம் கல்லூரி அருகே அமைந்துள்ள பாபு ஜெகஜீவன் ராம் சிலைக்கு அமித் ஷா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதைத்தொடர்ந்து, ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் – அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட பேரணியாக மொஜாம்ஜாஹி மார்க்கெட் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

அங்கு எம்.ஜே. மார்க்கெட் சந்திப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் அமித் ஷா முக்கிய உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தின் வாயிலாக தெலங்கானா மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அரசியல் ரீதியான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் நிறைவடைந்ததும் அமித் ஷா தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். மத்திய உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு ஹைதராபாத் முழுவதும் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

Follow Us