Thyroid Cancer: பெண்களுக்கு தைராய்டு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து.. இதன் அறிகுறிகள் என்ன?
Symptoms of Thyroid Cancer: புற்றுநோய் என்றாலே பெரும்பாலான மக்கள் பீதி அடைவது இயற்கையானது. இருப்பினும், தைராய்டு புற்றுநோய்க்கான சிகிச்சையில் முக்கிய சிகிச்சை முறை அறுவை சிகிச்சை ஆகும். இது நிலையைப் பொறுத்து தைராய்டு சுரப்பியின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையோ நீக்குகிறது.

தைராய்டு புற்றுநோய்
இன்றைய நவீன காலத்தில் தைராய்டு புற்றுநோயால் (Thyroid Cancer) பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டால், சரிசெய்யக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தைராய்டு புற்றுநோய் பெண்களில், குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்களில் (Mens), இந்த நோய் பொதுவாக 10 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தைராய்டு புற்றுநோய் ஏற்பட ஹார்மோன் மாற்றங்களே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் தைராய்டு செல்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. இது பெண்களில் ஆபத்தை அதிகரிக்கிறது. இளம் பருவம், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற பெண்களின் வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தைராய்டு செல்களை அசாதாரண மாற்றங்களுக்கு ஆளாக்குகிறது. கூடுதலாக, ஆட்டோ இம்யூன் தைராய்டு நோய்கள் பெண்களில் அதிகம் காணப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், தைராய்டு சுரப்பியின் நீண்டகால வீக்கம் பிற்காலத்தில் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
ALSO READ: சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தில் இந்த தவறை செய்யக்கூடாது! ஏன் தெரியுமா?
ஆண்களுக்கும் தைராய்டு புற்றுநோய் வருமா?
தைராய்டு புற்றுநோய் பெரும்பாலும் ஆண்களுக்கு தாமதமாகவே கண்டறியப்படுகிறது. ஆனால் அது ஏற்படும் போது, அது பெரும்பாலும் மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் என்ன..?
தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவை. இதனால், பெரும்பாலானோர் கவனிப்பது கிடையாது. மிகவும் பொதுவான அறிகுறி கழுத்தின் முன்புறத்தில் வலியற்ற கட்டி அல்லது வீக்கம். குரல் அல்லது கரகரப்பில் தொடர்ச்சியான மாற்றம், விழுங்குவதில் சிரமம், கழுத்தில் அழுத்தம் அல்லது இறுக்கம் போன்ற உணர்வு, தொற்று இல்லாமல் தொடர்ந்து இருமல் மற்றும் கழுத்தில் நிணநீர் முனைகள் விரிவடைதல் ஆகியவை தோன்றும்.
புற்றுநோய் அறிகுறிகள் வந்தால் முதலில் என்ன செய்யலாம்..?
புற்றுநோய் என்றாலே பெரும்பாலான மக்கள் பீதி அடைவது இயற்கையானது. இருப்பினும், தைராய்டு புற்றுநோய்க்கான சிகிச்சையில் முக்கிய சிகிச்சை முறை அறுவை சிகிச்சை ஆகும். இது நிலையைப் பொறுத்து தைராய்டு சுரப்பியின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையோ நீக்குகிறது. சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க அயோடின் சிகிச்சை தேவைப்படலாம். இது மீதமுள்ள புற்றுநோய் செல்களை அகற்ற உதவுகிறது. கூடுதலாக, பெரும்பாலான நோயாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தைராய்டு ஹார்மோன் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது சாதாரண உடல் செயல்பாடுகளைப் பராமரித்து, புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. இருப்பினும், மிகச் சில நோயாளிகளுக்கு மட்டுமே மேம்பட்ட சிகிச்சை தேவைப்படுகிறது.
ALSO READ: இதயத்திற்கு இந்த 5 உணவுகள் எதிரிகள்.. எச்சரிக்கும் மருத்துவர் பிள்ளை!
தைராய்டு புற்றுநோயைத் தடுப்பது சாத்தியமா?
தைராய்டு புற்றுநோயை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஆனால், அதன் ஆபத்தைக் குறைக்கலாம். தைராய்டு ஆரோக்கியத்திற்கு சமச்சீரான உணவின் மூலம் போதுமான அயோடின் உட்கொள்ளலும் அவசியம். தைராய்டு முடிச்சுகள் அல்லது ஆட்டோ இம்யூன் தைராய்டு நோயின் வரலாறு உள்ளவர்கள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதை செய்வதன் மூலம், வராமல் அல்லது தடுக்க முடியும்.