கோடை காலத்தில் தண்ணீர் குடிக்கும் முறையிலும் ஆரோக்கியம் மறைந்திருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மண்பாண்டங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் உடலுக்கு பல நன்மைகளை தரும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் நிதிகா கோஹ்லி கூறுவதாவது, மண் குடத்தில் சேமிக்கும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும்.