உடலின் ஒளியால் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் கருவி – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Scientists Create Light-Based Covid Tool : கொரோனா, எச்ஐவி போன்ற நோய்களை துல்லியமாக கண்டறியும் வகையில் லுகாஸ் எனும் புதிய கருவிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உடலில் வெளிப்படும் ஒளிகள் மூலம் நோய்களுக்கான அறிகுறிகளைக் கண்டறிந்து 25 நிமிடங்களில் துல்லியமாக முடிவுகளை வழங்கும்.

உடலின் ஒளியால் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் கருவி - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

மாதிரி புகைப்படம்

Published: 

02 Jun 2025 21:57 PM

 IST

அமெரிக்க (America) விஞ்ஞானிகள் கொரோனா (Coronavirus), எச்.ஐ.வி (HIV) மற்றும் ஹெபடைட்டிஸ் போன்ற வைரஸ்களை துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிய ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். உடலில்  இருந்து பெறப்படும் இயற்கை ஒளியை (bioluminescence) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கருவி,  மருத்துவமனைகள் போன்ற வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் கூட நோய்களைத் துல்லியமாகவும் கண்டறிய உதவக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது மருத்துவ உலகில் மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.  கொரோனா வைரஸ் மீண்டும் உலக அளவில் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவிலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LUCAS எனும் புதிய கருவி என்ன செய்யும்?

இந்த கருவிக்கு விஞ்ஞானிகளால்  LUCAS (Luminescence CAscade-based Sensor) என்ற பெயர் அளிக்கப்பட்டுள்ளதால் இது ஒரு உடலில் இருந்து வெளிப்படும் இயற்கை ஒளி வெளியீட்டை அதாவது இயற்கை என்சைம்களை பயன்படுத்தி, நோய்கள் இருப்பதைக் கண்டு பிடிக்கிறது. LUCAS கருவி, இரத்தம் அல்லது மூக்கு பகுதியில் வைரஸ் உள்ளதா என்பதை அறிய கண்ணுக்குத் தெரியும் ஒளி சிக்னல்களைக் கொடுக்கும். இந்த ஒளி, பழைய முறைகளுடன் ஒப்பிடும்போது 500 மடங்கு அதிக பிரகாசமானதும், 8 மடங்கு நீண்ட நேரம் நிலைத்திருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கண்டுபிடிப்பில் அசத்தல் துல்லியம்

மாஸ் ஜெனரல் பிரகாம் எனும் அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சியை வழிநடத்திய டாக்டர் ஹாடி ஷாஃபீ தெரிவித்ததாவது, இரத்தத்தில் ஒரு வைரஸ் மூலக்கூறை கண்டுபிடித்து, அதனை பரிசோதிக்கும் முறையாகும். முன்பு இதனை பரிசோதிப்பது சிரமமாக இருந்தது. ஆனால் LUCAS மூலம் இது எளிதாகி விட்டது” என்றார். இந்த கருவி, கொரோனா, எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி ஆகிய வைரஸ் நோய்களுக்கு உடனடியாகவும் மற்றும் சரியாகவும் அறிகுறிகளை கண்டறிந்து 94 சதவிகிதம்  துல்லியத்துடன் முடிவுகளை அளித்ததுள்ளது ன்றார்.

23 நிமிடத்தில் ரிசல்ட்

மிக குறுகிய நேரமான 23 நிமிடங்களில் LUCAS முடிவுகளை அளிக்கிறது. முக்கியமாக, இந்த கருவி சிறியதும், எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதுமானது. ஆகையால், நகரமயமாகாத பகுதிகளிலும், மருத்துவ ஆய்வுக்கூடங்கள் இல்லாத இடங்களிலும் இதனை பயன்படுத்தி நோய்களை விரைவில் கண்டறிய முடியும்.

இந்த கருவியின் மூலம் எதிர்காலத்தில் அல்சைமர் போன்ற பிற நோய்களையும் கண்டுபிடிக்க முடியும் என நம்பப்படுகிறது. தற்போது, பல்வேறு நோய்களை அடையாளம் காணும் முயற்சிகளில் இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் முக்கிய ஆராய்ச்சியாளரான டாக்டர் சுங்க்வான் கிம், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிக முக்கியம். எங்கள் நோக்கம், இதை எளிதாக்கி அனைவருக்கும் கிடைக்கச் செய்வதுதான் என்றார்.

உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?