Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Self Medication Risks: ஆலோசனை இல்லாமல் காய்ச்சலுக்கு மாத்திரை..! மருத்துவரை அணுகுவது ஏன் அவசியம்?

Medicines Without Prescription: இந்தியாவில் மருந்துகள் வெவ்வேறு அட்டவணைகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. பல வலி நிவாரணிகள் அட்டவணை H இன் கீழ் வருகின்றன. அதாவது, இவை அனைத்தும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே விற்கப்பட வேண்டும். இருப்பினும், இந்த மருந்துகளும் மருந்துச் சீட்டு இல்லாமலே மெடிக்கல்களில் கிடைக்கின்றன.

Self Medication Risks: ஆலோசனை இல்லாமல் காய்ச்சலுக்கு மாத்திரை..! மருத்துவரை அணுகுவது ஏன் அவசியம்?
மருந்து உட்கொள்ளல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Jan 2026 16:58 PM IST

தமிழ்நாட்டில் பலரும் காய்ச்சல் (Fever) அல்லது தலை வலி வந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மெடிக்கல் கடைக்கு சென்று வலி நிவாரணிகள், காய்ச்சல் குறைப்பான்கள் மற்றும் இருமல் சிரப்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், இதுமாதிரியான அலட்சியமான விஷயங்கள் ஆபத்தில் முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் அமில அடிப்படையிலான மருந்துகளைத் தவிர, வலி ​​நிவாரணிகள், இருமல் சிரப்கள் மற்றும் தூக்க மாத்திரைகள் (Sleeping Tablets) ஆகியவற்றை மெடிக்கல்களில் வாங்கி பயன்படுத்தக்கூடாது. இதுமாதிரியான மருந்துகளின் முறையற்ற பயன்பாடு பல உறுப்புகளை சேதப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

ALSO READ: நரம்பு வலியிலிருந்து நிவாரணம்.. ‘பீடனில் கோல்ட்’ ஆராய்ச்சி கண்டுபிடித்த நிரந்தர தீர்வு

பக்க விளைவுகள் என்ன ?

நாம் பொதுவாக பயன்படுத்தப்படும் வலி, வீக்கம் மற்றும் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஸ்டெராய்டல் அல்லாதவை என்று அழைக்கப்படுகின்றன. அதில், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பாராசிட்டமால், இப்யூபுரூஃபன், டைக்ளோஃபெனாக் மற்றும் நாப்ராக்ஸன் ஆகியவை அடங்கும். இதில், பாராசிட்டமால் பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், அதிகளவில் பயன்படுத்தும்போது கடுமையான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறிப்பாக மது அருந்துபவர்களுக்கு அல்லது ஏற்கனவே கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தானது.

டைக்ளோஃபெனாக் மற்றும் கீட்டோரோலாக் போன்ற வலி நிவாரணிகளை நீண்ட நேரம் உட்கொள்வது வயிற்றுப் புண்கள், உட்புற இரத்தப்போக்கு, சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இருப்பினும், இந்த மருந்துகள் பல இடங்களில் மருந்துச் சீட்டு இல்லாமல் எளிதாகக் கிடைக்கின்றன .

இந்த மருந்துகளை ஏன் எடுக்கக்கூடாது..?

சமீபத்தில், மத்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நிம்சுலைடு என்ற மருந்து கல்லீரலுக்கு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இந்த மருந்து ஏற்கனவே பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதன் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு காய்ச்சலையும் பொதுவான காய்ச்சலாக தவறாகப் புரிந்துகொண்டு மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மெடிக்கல்களில் வாங்கி மருந்து எடுத்து கொள்ளப்படுகிறது. அதாவது டெங்கு, மலேரியா, டைபாய்டு, நிமோனியா, காசநோய், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற ஆபத்தான நோய்களிலும் காய்ச்சல் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், காய்ச்சலுக்கான மருந்தை மட்டும் எடுத்துக்கொள்வது காய்ச்சலை குறைக்கும் என நினைப்பது ஆபத்தானதாக மாறலாம்.

ALSO READ: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சிக்குன் குனியா.. இதன் அறிகுறிகள் என்ன..?

மருத்துவரை அணுகுவது ஏன் அவசியம்?

இந்தியாவில் மருந்துகள் வெவ்வேறு அட்டவணைகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. பல வலி நிவாரணிகள் அட்டவணை H இன் கீழ் வருகின்றன. அதாவது, இவை அனைத்தும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே விற்கப்பட வேண்டும். இருப்பினும், இந்த மருந்துகளும் மருந்துச் சீட்டு இல்லாமலே மெடிக்கல்களில் கிடைக்கின்றன. நாம் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளும் மருந்துகள் வயிற்றுப் புண்கள், உட்புற இரத்தப்போக்கு, கல்லீரல் செயலிழப்பு , சிறுநீரக பாதிப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம். அதன்படி, காய்ச்சல் அல்லது வலி ஏற்பட்டால் சுய மருந்து செய்வதற்குப் பதிலாக மருத்துவரை அணுகுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.