Dirty Pillow: அழுக்கு தலையணையில் இவ்வளவு ஆபத்தா..? சுத்தம் செய்வது ஏன் முக்கியம்..?

Pillow Hygiene Tips: தலையணைகள் நம் தூக்கத்திற்கு மிகவும் முக்கியமானவை. ஆனால், அவை எவ்வளவு அழுக்காக இருக்கின்றன என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? தினசரி வியர்வை, இறந்த சரும செல்கள், தூசி மற்றும் பாக்டீரியாக்கள் தலையணைகளில் குவிந்து, ஒவ்வாமை, தோல் பிரச்சனைகள் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

Dirty Pillow: அழுக்கு தலையணையில் இவ்வளவு ஆபத்தா..? சுத்தம் செய்வது ஏன் முக்கியம்..?

தலையணை சுத்தம்

Published: 

16 Aug 2025 15:56 PM

ஒரு நாளில் எவ்வளவு நேரம் முழித்து இருக்கிறோமோ, அதே அளவிற்கு பெரும்பகுதியை தூங்குவதில் செலவிடுகிறோம். தூங்கும்போது (Sleeping) நம் முகமும், தலைமுடியும் தலையணைக்கு மிக அருகில் இருக்கும். இருப்பினும், நீங்கள் தினந்தோறும் நிம்மதியாக தூங்க பயன்படுத்தும் தலையணை உண்மையில் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதை பற்றி என்றாவது யோசித்துள்ளீர்களா..? நிபுணர்களின் கருத்தின்படி, உங்கள் தலையணை கழிப்பறை (Toilet) இருக்கையில் இருக்கும் அழுக்கை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தினந்தோறும் தலையணையை பயன்படுத்தும்போது அதில் தூசி, வியர்வை, இறந்த சரும செல்கள், ஈரப்பதம் மற்றும் எண்ணெய் ஆகியவை குவிந்து பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களில் வீடாக மாறிவிடுகிறது. இதனை தொடர்ந்து, இந்த வகை உயிரினங்கள் தலையணைகளின் மென்மையான மடிப்புகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை நாளடைவில் நமது தோல் மற்றும் சுவாசத்தில் பிரச்சனைகளை உண்டாக்கும்.

ALSO READ: உஷார்.. சரியான தூக்கம் இல்லையா? இவ்வளவு சிக்கல்கள் தேடி வரும்!

தூசி:

தலையணைகளில் படியும் தூசிகளில் சிறிய பூச்சிகள் மற்றும் இறந்த சரும செல்களில் உயிர்வாழ்கின்றன. இவை நமக்கு ஒவ்வாமை, தும்மல் அல்லது ஆஸ்துமாவைத் தூண்டும்.

பாக்டீரியா:

தலையணைகளில் ஸ்டேஃபிளோகோகஸ் மற்றும் ஈ. கோலை போன்ற பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கலாம். இவை, நமக்கு தோல் தொற்று மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

பூஞ்சை:

ஈரப்பதம் மற்றும் வியர்வை தலையணைகளில் பூஞ்சை வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இது நமக்கு சுவாச பிரச்சனைகளை மோசமாக்கும்.

அழுக்கு தலையணைகளை பயன்படுத்தும்போது முகப்பரு, தடிப்புகள் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்தும். அதனை தொடர்ந்து, தூசி மற்றும் பூஞ்சை போன்றவை ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைகளை உண்டாக்கும். மேலும், அழுக்கு தலையணையில் தூங்குவது தூக்கத்தின் தரத்தை குறைத்து, சோர்வுக்கு வழிவகுக்கிறது.

ALSO READ: காலையில் புத்துணர்ச்சியுடன் எழ வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்..!

தலையணைகளை சுத்தமாக வைக்க என்ன செய்யலாம்..?

  • வாரத்திற்கு ஒருமுறை தலையணையின் உறைகளை மாற்றங்கள். அப்படி இல்லையெனில், துவைத்து சூரியஒளியில் காயப்போட்டு மீண்டும் பயன்படுத்துங்கள்.
  • தலையணை உறைதான் முதலில் பாக்டீரியா மற்றும் தூசியின் வீடாக மாறும். எனவே, இவை சுத்தமாக இருப்பது முக்கியம்.
  • தலையணை மற்றும் தலையணை உறைகளை சூரிய ஒளியில் வைப்பதன்மூலம், மாதத்திற்கு ஒரு முறையாவது தலையணைகளை வெயிலில் காயப்போடவும்.

அதிகளவில் குவியும் இறந்த செல்கள்:

மனித உடல் ஒவ்வொரு நாளும் 500 மில்லியன் இறந்த செல்களை வெளியேற்றுகிறது. கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்க படுக்கை நிறுவனமாக அமெரிஸ்லீப், ஒரு வாரமாக துவைக்கப்படாத தலையணை உறையிலிருந்து ஸ்வாப்களை எடுத்தது. அந்த தலையணை உறையில் ஒரு சதுர அங்குலத்திற்கு சுமார் 3 மில்லியன் பாக்டீரியாக்கள் இருந்தன. இது சராசரி கழிப்பறை இருக்கையை விட சுமார் 17,000 மடங்கு அதிகம்.