Foot Health Tips: காலை முதல் இரவு வரை.. ஷூக்குள் சிறைப்படும் கால்கள்..! கால் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி?
Long Working Hours and Foot Problems: நீண்ட நேரம் ஷூ அணிவதால் கால் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். சரியாகப் பொருந்தாத ஷூக்கள் காயங்கள், தொற்றுகள் மற்றும் வலியை ஏற்படுத்தும். அதிகப்படியான வியர்வை மற்றும் காற்றின்மை பூஞ்சை மற்றும் பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கால் ஆரோக்கியம்
இன்றைய நவீன காலத்தில் அனைவரும் அலுவலகம் சென்று வேலை பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தினமும் அலுவலகம் செல்வதால் கட்டாயமாக ஷூ (Office Shoes) அணிய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இதனால், காலை முதல் இரவு வரை நீங்களும் ஷூ அணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், கவனமாக இருங்கள். இந்தப் பழக்கம் கால்களின் (Foot Problems) ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பல மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதைப் பற்றி உங்களுக்குச் நாங்கள் சொல்கிறோம். நீண்ட நேரம் ஷூகளை அணிவது கால்களை ஒரே நிலையில் வைத்திருக்க செய்யும். இது நடப்பதில் சிரமம், தசைகளில் விறைப்பு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கால்களின் நெகிழ்வுத்தன்மையைக் குறைய தொடங்குகிறது.
சரியாக பொருந்தாத ஷூக்களை என்றும் அணியாதீர்கள்:
சரியாகப் பொருந்தாத அல்லது மிகவும் இறுக்கமாக இருக்கும் ஷூக்களை எக்காரணத்தையும் என்றுமே அணியாதீர்கள். இது உங்கள் பாதங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சருமத்தையும் சேதப்படுத்தும். காலணிகளுக்கும் தோலுக்கும் இடையே தொடர்ந்து ஏற்படும் உராய்வு, தோலில் தடிப்புகள், எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு வழிவகுக்கும். சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இவை மிகவும் தீவிரமானதாகிவிடும்.
ALSO READ: பின்னோக்கி நடக்கும் பயிற்சி பற்றி தெரியுமா? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
மூடிய ஷூக்களை நீண்ட நேரம் அணிவதால் அதிகப்படியான வியர்வை ஏற்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது ரிங்வோர்ம் மற்றும் அரிப்பு போன்ற தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. பாதங்கள் நீண்ட நேரம் ஷூக்களுக்குள் அடைத்து வைத்திருப்பதால், இதனால் காற்று உள்ளே போகாது. இது துர்நாற்றத்தை அதிகரிப்பதோடு பாக்டீரியா தொற்று அபாயத்தையும் அதிகரிக்கிறது.
நீண்ட நேரம் காலணிகளை அணிவது கால்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் பூட்டி வைத்திருப்பதாகவும், இதனால் கால் தசைகள் விறைப்பாகவும் பலவீனமாகவும் மாறும். இந்த தொடர்ச்சியான இறுக்கம் கால்களின் இயற்கையான இயக்கத்தைக் குறைக்கிறது. மேலும், காலப்போக்கில் வலி, பலவீனம் மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொருந்தாத அல்லது மிகவும் இறுக்கமாக கட்டப்பட்ட காலணிகள் கால்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில், இவை கால்களை நகர்த்துவதற்கு இடமளிக்காது. மேலும் தோலைத் தேய்ப்பதால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
ALSO READ: இளம் வயதிலேயே எலும்பு பலவீனம்.. எலும்பு தேய்மானத்தின் காரணங்களும், தீர்வுகளும்..!
வசதியான மற்றும் சரியான அளவிலான காலணிகளை அணியுங்கள். உங்கள் கால்களை அவ்வப்போது அலுவலகத்தில் திறந்து வைக்கவும், இதனால், உங்கள் கால்களுக்கு சற்று காற்றோட்டம் கிடைக்கும். உங்கள் கால்களில் அடிக்கடி கவனம் செலுத்துவது முக்கியம். ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.