உங்கள் கால்களில் இந்த பிரச்னை இருக்கா? இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்
health alert : சமீப காலமாக இதய நோய் பாதிப்புகள் மக்களிடையே அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சில அறிகுறிகளை கண்டறிவதன் மூலம் இதய நோய்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதயம் மற்றும் மூளையில் (Brain) உள்ள தமனிகள் அடைப்பு ஏர்படுவதால் மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. இது சமீப காலங்களில் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இருப்பினும், கால்கள் உட்பட உடலின் பிற பகுதிகளில் உள்ள தமனிகள் அடைப்பதால் இதய நோய்களும் ஏற்படலாம். கால்களில் தமனிகள் அடைப்பதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மாரடைப்புக்கு முன் சில அறிகுறிகள் தோன்றும் என்றும், அவற்றின் அடிப்படையில் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் புறக்கணித்தால் கடுமையான பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக கால்களில் காணப்படும் சில அறிகுறிகள் மாரடைப்பு அபாயத்தை உங்களுக்கு நினைவூட்டுகின்றன என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதய நோய் ஆபத்தை சொல்லும் கால்களில் தோன்றும் அறிகுறிகள் என்ன? அவற்றை கண்டுபிடிப்பது எப்படி என பார்க்கலாம்.
இதையும் படிக்க : கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 சூப்பர் உணவுகள்- என்ன தெரியுமா?




கால்களில் தோன்றும் அறிகுறிகள்
முதலாவது கால்களின் வீக்கம். நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தாலும் அல்லது நின்றாலும், உடலில் உள்ள அனைத்து நீரும் கால்களை அடைகிறது. இதன் விளைவாக, அங்கு வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதயம் சரியாக வேலை செய்யாதபோது, பம்ப் செய்வது சரியாக நடக்காது. இதன் விளைவாக, உடலில் உள்ள அனைத்து திரவமும் தோலின் கீழ் வருகிறது. இது படிப்படியாக வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
இரத்த நாளங்களில் கொழுப்பு குவிந்தால், அது கால்களிலும் இதயத்திலும் அடைப்புகளை ஏற்படுத்தும். இது புற தமனி நோய் (PAD) என்று அழைக்கப்படுகிறது. புறக்கணிக்கப்பட்டால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. நடக்கும்போது கால் தசைகளில் வலி ஏற்படும். நீங்கள் ஓய்வெடுக்கும்போது வலி குறையும். கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு ஏற்படும். அது போன்ற நேரங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
இதையும் படிக்க : உங்கள் முகத்தில் இந்த அறிகுறிகள் இருக்கா? உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கலாம்!
பாதங்களின் நிறம் மாறி அவை குளிர்ச்சியாக உணர்கின்றன. காயங்கள் மற்றும் கீறல்கள் விரைவாக குணமடையாது. கால்களில் முடி உதிர்வதோடு, தோல் வறண்டு பளபளப்பாகத் தெரியும். நகங்கள் மெதுவாக வளர்ந்து உடையக்கூடியதாக மாறும். இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். இந்த வகையான வலி பொதுவாக உடலின் கீழ் பகுதியில், கனுக்கால், தொடைகள் மற்றும் இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படுகிறது. இந்த வலி நடக்கும்போது, படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படுகிறது. இது ஓய்வெடுக்கும்போது குறையும். இதுபோன்ற நேரங்களில் மருத்துவரை அனுகுவது நல்லது.