High Cholesterol Risk: குடும்பத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையா? ஆரம்பக்கட்ட பரிசோதனை ஏன் முக்கியம்..?

Family History of High Cholesterol: குடும்பத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், அறிகுறிகள் தெரியும் வரை காத்திருக்கக் கூடாது. ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா போன்ற மரபணு பிரச்சனைகள் இளம் வயதிலேயே இதய நோய்க்கு வழிவகுக்கும். ஆரம்பகால பரிசோதனை மூலம் ஆபத்தை குறைக்கலாம். கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

High Cholesterol Risk: குடும்பத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையா? ஆரம்பக்கட்ட பரிசோதனை ஏன் முக்கியம்..?

உயர் கொலஸ்ட்ரால்

Published: 

24 Aug 2025 15:29 PM

குடும்பத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனை (Family History Cholesterol) இருந்தால், உங்களுக்கு அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருப்பது ஆபத்தானது. கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் பெரும்பாலும் உடலுக்குள் மெதுவாக உருவாக தோன்றும். உங்களுக்கு குடும்ப ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா (Hypercholesterolemia) போன்ற மரபணு நிலை இருந்தால், இதய நோய்க்கான (Heart Disease) ஆபத்து சீக்கிரமாகவே தொடங்குகிறது. சிலருக்கு உங்களின் இருபது வயதுகளின் ஆரம்பத்திலேயே தோன்ற ஆரம்பிக்கும். அதனால்தான் வழக்கமான கொழுப்பின் அளவை பரிசோதிப்பது வாழ்க்கையின் நடுப்பகுதி வரை காத்திருக்கக்கூடாது. இருப்பினும், ஆரம்பகால பரிசோதனைகள் மற்றும் சரியான நடவடிக்கைகள் மூலம், நீங்கள் ஆபத்தை குறைத்து, பிரச்சினைகள் தொடங்குவதற்கு முன்பே உங்கள் இதயத்தை பாதுகாக்கலாம்.

குடும்ப ஹைப்பர்கொலெஸ்டிரோலீமியா என்றால் என்ன..?

குடும்ப ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா என்பது ஒரு தீவிர மரபணு கோளாறு ஆகும். இது மிகச் சிறிய வயதிலிருந்தே ஆபத்தான அளவில் நல்ல கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் விளக்குகிறது. மோசமான உணவு அல்லது உடற்பயிற்சியின்மையால் ஏற்படும் அதிக கொழுப்பு பிரச்சனைகளை போல்லாமல், ஹைப்பர்கொலஸ்டிரோலீமியாவை தருகிறது. மேலும், வாழ்க்கை முறை மாற்றங்களால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது.

நன்றாக சாப்பிட்டு சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கும் இந்த நிலை இருந்தால் அதிக கொழுப்பு ஏற்படலாம். அதனால்தான் இது மிகவும் ஆபத்தானது. பலருக்கு மிகவும் தாமதமாகும் வரை தாங்கள் ஆபத்தில் இருக்கிறோம் என்பது தெரியாது. இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா ஆரம்பகால இதய நோய் அபாயத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கும்.

ALSO READ: சலூனில் தலைமுடியை அலசும்போது கவனம்! ஆபத்தை தரும் பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம்..!

ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா உள்ளவர்களுக்கு இதய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு 20 மடங்கு அதிகம். 50 வயதிற்குள், ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா உள்ள ஆண்களில் பாதி பேர் மாரடைப்பால் பாதிக்கப்படலாம். மேலும், பெண்கள் 60 வயதிற்குள் 30 சதவீத ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் எப்போது கொழுப்பின் அளவை பரிசோதிக்க வேண்டும்..?

குடும்பத்தில் இதய நோய் அல்லது அதிக கொழுப்பு இருந்தால், கொலஸ்ட்ரால் பரிசோதனைக்காக 40 வயது வரை காத்திருப்பது ஒரு ஆபத்தை தரும். இதற்கு ஆரம்பகால பரிசோதனை முக்கியமானது. குறிப்பாக, உங்களுக்கு குடும்ப ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா இருந்தால், இது ஒரு மரபணு நிலை, இது சிறு வயதிலிருந்தே உங்கள் ஆபத்தை அதிகரிக்கும்.

அதிக கொலஸ்ட்ரால் அளவுகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். சிடிசி படி, 9 முதல் 11 வயது வரை உள்ள அனைவரும் தங்கள் கொழுப்பு அளவை பரிசோதித்து கொள்ள வேண்டும். 20 வயதில் தொடங்கி ஒவ்வொரு 4 முதல் 6 வருடங்களுக்கு ஒரு முறை சோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால், குடும்பத்தில் ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா அல்லது ஆரம்பகால இதய நோய் வரலாறு உள்ல குழந்தைகளுக்கு முன்கூட்டியே சோதனை செய்வது முக்கியம். குடும்ப வரலாறு, உடல் பருமன் அல்லது சர்க்கரை நோய் காரணமாக உங்களுக்கு அதிக ஆபத்து இருந்தால், நீங்கள் அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ளலாம்.

தடுக்க என்ன செய்யலாம்..?

நிறைவுள்ள மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், பதப்படுத்தப்படாத உணவுகள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும். தொடர்ந்து நடைபயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளும் கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும். அதேநேரத்தில், ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா உள்ளவர்களுக்கு, இந்த முறையான வாழ்க்கை முறை பெரும்பாலும் போதுமானதாக இருக்காது.

ALSO READ: எடையை குறைக்க கடுமையாக டயட் பிளானா..? அதிகரிக்கும் இதய நோய் ஆபத்துகள்!

மருத்துவ உதவி:

கெட்ட கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், கடுமையான சிக்கல்களை தடுக்கவும், ஸ்டேடின்கள் போன்ற உயர் கொழுப்பை கட்டுப்படுத்தும் மருந்துகள் பெரும்பாலும் அவசியம். அதன்படி, வழக்கமான இரத்த பரிசோதனைகள் முன்னேற்றத்தை கண்காணிக்கும். உங்கள் மரபணுக்களில் அதிக கொழுப்பு இருக்கும்போது, விழிப்புணர்வும் ஆரம்பலாக நடவடிக்கையும் உண்மையிலேயே உயிர்காக்கும் கருவிகளாக செய்யப்படும்.