Heart Health: இதய பிரச்சனைகளுக்கான 4 முக்கிய காரணங்கள்.. இதை மாற்றினால் மாரடைப்பு வராது!
Heart Health Tips: இதய ஆரோக்கியம் என்பது நேரத்திற்கு மருந்துகளை உட்கொள்வது மட்டுமல்ல, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமும் ஆகும். வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் சுத்தமான சூழல் ஆகியவை இதயத்தை வலுவாக வைத்திருக்கும்.

இதய ஆரோக்கியம்
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம். நமது இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்கிறது. இது இரத்த ஓட்ட அமைப்பின் ஒரு அடிப்படை அங்கமாகும். அதனால்தான் ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க அனைவரும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் இதயப் பிரச்சனைகள் (Heart Problems) அனைவரையும் பயமுறுத்துகின்றன. இதய நோய் அதிகரிப்பதற்கு வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகள் (Fast Food) காரணமாகின்றன என்று இருதயநோய் நிபுணர்கள் கூறுகின்றனர். 30 வயதுக்குட்பட்டவர்களும் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருவதாலும், குழந்தைகளிலும் மாரடைப்பு ஏற்படுவது பதிவாகியுள்ளதாலும், அனைத்து வயதினரும் தங்கள் இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் என வயதைப் பொருட்படுத்தாமல் ஏற்படும் இந்தப் பிரச்சனைக்கு 4 முக்கிய காரணங்கள் உள்ளன. எனவே, இதுவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
ALSO READ: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10 இந்திய உணவுகள் – புற்றுநோய் மருத்துவர் பகிர்ந்த தகவல்
மன அழுத்தம்:
மன அழுத்தம் இதயம் தொடர்பான முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். அதிக மன அழுத்தம் ஏற்படும்போது இது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இது நீண்ட நாட்களாக தொடரும்போது இதயத்தை பலவீனப்படுத்துகிறது. எனவே, அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மன சமநிலையை நிலைநிறுத்துவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம். தியானம், ஆழ்ந்த சுவாசம் மற்றும் லேசான உடற்பயிற்சி ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்கும்.
தூக்கப் பிரச்சினைகள் (மோசமான தூக்க சுழற்சி):
இரவில் சரியாக தூங்காமல் இருப்பது அல்லது ஒழுங்கற்ற தூக்கம் போன்றவை இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கும். போதுமான தூக்கம் இல்லாதது இரத்த நாளங்களில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது இதயத்தில் அழுத்தத்தை அதிகரித்து இதய நோயை அதிகரிக்கிறது. இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கி காலை 7-8 மணிக்குள் விழிப்பது நல்லது. இந்த தூக்க சுழற்சி இதயத்திற்கு நல்லது.
உடல் செயலற்ற தன்மை:
12 மணிநேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நகராமல் அலுகலக வேலைகளில் ஈடுபடும் பலர் மிகக் குறைந்த உடல் செயல்பாடுகளைச் செய்கிறார்கள். நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், அதிக கொழுப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, ஒவ்வொரு நாளும் நடைபயிற்சி, நீட்சி அல்லது ஜாகிங் போன்ற லேசான பயிற்சிகளைச் செய்வது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
புகைப்பிடித்தல்:
மாசுபாடு இதய ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாகும். புகைபிடித்தல் இதய ஆரோக்கியத்திற்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்திருப்பது இதயத்தைப் பாதுகாக்க உதவும். மேலும், புகைபிடிப்பதை விட்டுவிட்டு, வீடு மற்றும் காரில் காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்துவது நல்லது.
ALSO READ: துரித உணவுகளை தூரம் வையுங்கள்.. ஆண்களின் கருவுறுதலை பாதிக்கும் அபாயம்..!
இதய ஆரோக்கியம் என்பது நேரத்திற்கு மருந்துகளை உட்கொள்வது மட்டுமல்ல, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமும் ஆகும். வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் சுத்தமான சூழல் ஆகியவை இதயத்தை வலுவாக வைத்திருக்கும். இந்த மாற்றங்கள் இதயத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)