Health Tips: டார்க் சாக்லேட் உண்மையில் ஆரோக்கியமானதா? ஒயிட் சாக்லேட் பண்புகள் எப்படி..?
Dark vs White Chocolate: டார்க் மற்றும் ஒயிட் சாக்லேட்டுகளின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தீமைகளை ஒப்பிடுகிறது. டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், அதிக அளவில் உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஒயிட் சாக்லேட் கால்சியம் மற்றும் வைட்டமின் D போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும், டார்க் சாக்லேட்டை விட ஆரோக்கிய நன்மைகள் குறைவு. மிதமான அளவில் உட்கொள்ளுவது முக்கியம்.

உங்களுக்கு 5 வயதாக இருந்தாலும் 50 வயதாக இருந்தாலும் சரி, சாக்லேட்டுகள் என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். சாக்லேட்களை சாப்பிடாமல் இருப்பவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஒருவருக்கு பிறந்த நாள் என்றாலும், முதலில் சாக்லேட்களை கொடுத்தே அன்பை பறிமாறி கொள்வோம். பொதுவாக, டார்க் சால்லேட்டுகளில் (Dark Chocolate) ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டசத்து மதிப்பையும் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, 100 கிராம் டார்க் சாக்லேட்டில் 70- 85 சதவீதம் கோகோ சத்து உள்ளது. இது ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இந்தநிலையில், ஒயிட் சாக்லேட் (White Chocolate) அல்லது டார்க் சாக்லேட்டில் எது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை தெரிந்துகொள்வோம்.
ஒயிட் சாக்லேட் – டார்க் சாக்லேட்:
ஒயிட் சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட் இரண்டும் மிகவும் பிரபலமான சாக்லேட் வகைகளாகும். இதை சாப்பிடும்போதெல்லாம் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்ற கேள்வி எழுகிறது. ஒயிட் சாக்லேட்டில் கோகோ பவுடர், வெண்ணெய், சர்க்கரை மற்றும் பால் திடப்பொருட்கள் உள்ளன. இதில், டார்க் சாக்லேட்டை விட குறைவான கோகோ அளவு இருக்கும். எனவே, இது இனிப்பாகவும், கிரீமியாகவும் இருக்கும்.
ALSO READ: ஆரோக்கிய இனிப்பு எது? சர்க்கரைக்கு மாற்றான இயற்கை வெல்லம்
டார்க் சாக்லேட்டில் ஒயிட் சாக்லேட்டை விட அதிக கோகோ உள்ளது. இதில் சர்க்கரை மற்றும் பால் திரப்பொருட்களும் உள்ளன. ஆனால், கோகோவை விட மற்ற பொருட்கள் அனைத்தும் குறைவாகவே சேர்க்கப்படும்.
டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகள் என்ன..?
சில ஆய்வுகள் டார்க் சாக்லேட் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைக்கும் என்றும் கூறுகின்றன. உலகளவில் மரணத்திற்கு இருதய நோய்கள் முக்கிய காரணங்களாகும். கோகோவில் உள்ள ஃபிளாவனாய்டுகளின் அதிக உள்ளடக்கம் இருதய நோய்கள் அபாயத்தை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஸ்டடியின் ஒரு ஆய்வில், டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். டார்க் சாக்லேட்டில் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தக்கூடிய பாலிபினால்களும் உள்ளன. இதன் விளைவாக, இது வகை 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மிதமான அளவில் டார்க் சாக்லேட் சாப்பிடுவது எடையை குறைக்கவும் உதவும்.
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?
டார்க் சாக்லேட்டை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் காஃபின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும். இதனால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். மேலும் குமட்டல், நீரிழப்பு மற்றும் தூக்கமின்மை ஏற்படும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், அதிகமாக டார்க் சாக்லேட் சாப்பிடுவது காஃபின் உட்கொள்ளலை அதிகரிக்கும். இது கருவுக்கு பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது.
டார்க் சாக்லேட்டை அதிகமாக உட்கொள்வது இரத்த உறைதல் செயல்முறையையும் மெதுவாக்கும். டார்க் சாக்லேட் பார்களில் காட்மியம் மற்றும் ஈயம் இருப்பதாகவும், இந்த உலோகங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் வெளிப்படுத்தியுள்ளது.
ஒயிட் சாக்லேட் நன்மைகள்:
ஒயிட் சாக்லேட்டில் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒயிட் சாக்லேட்டை உட்கொண்ட சிலருக்கு, ஆற்றல் அதிகரிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதிகரிக்கும் என்று இதுவரை நம்பப்பட்டது. ஆனால், எந்தவொரு ஆய்விலும் இது நிரூபிக்கப்படவில்லை.
ALSO READ: வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
ஒயிட் சாக்லேட் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. காலையிலோ அல்லது இரவிலோ சாக்லேட் சாப்பிடுவது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காலையில் சாக்லேட் சாப்பிடுவது கொழுப்பை எரிக்கவும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும்.
இரண்டு வகையான சாக்லேட்டுகளையும் தேவைக்கு அதிகமாக எடுத்துகொள்வது சிக்கலை தரும். எனவே, உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால், டார்க் சாக்லேட்டை உட்கொள்வது நல்லது.