Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முட்டை, சிக்கனில் இருந்து பறவைக்காய்ச்சல் பரவுமா? உணவு பாதுகாப்பு குறித்த விளக்கம்!!

Can Bird Flu Spread Through Eggs And Chicken?: பறவைக் காய்ச்சல் பரவல் குறித்த செய்திகளால், முட்டை மற்றும் கோழி போன்ற அன்றாட உணவுகள் மூலம் வைரஸ் பரவல் இருக்குமா? என்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள், முட்டை மற்றும் கோழியை முறையாக சமைப்பதன் மூலம் வைரஸ் பரவும் அபாயம் நீங்குகிறது என்கின்றனர்.

முட்டை, சிக்கனில் இருந்து பறவைக்காய்ச்சல் பரவுமா? உணவு பாதுகாப்பு குறித்த விளக்கம்!!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Feb 2026 12:26 PM IST

சென்னை, பிப்ரவரி 08: சென்னையில் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளில் ஆய்வு செய்த போது, அவற்றுக்கு ஹெச்5என்1 கிருமி (H5N1) தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பறவை காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது.

மேலும் படிக்க: காகம் இறந்து கிடந்த விவகாரம்…சென்னையில் பறவை காய்ச்சல் பரவல்..கால்நடைத்துறை எச்சரிக்கை!

இதனிடையே, பறவைக் காய்ச்சல் பரவல் குறித்த செய்திகளால், முட்டை மற்றும் சிக்கன் போன்ற அன்றாட உணவுகள் மூலம் வைரஸ் பரவல் இருக்குமா? என்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள், முட்டை மற்றும் சிக்கனை முறையாக சமைப்பதன் மூலம் வைரஸ் பரவும் அபாயம் நீங்குகிறது என்றும், இதனால் அவை நுகர்வுக்கு பாதுகாப்பானவை என்றும் உறுதிப்படுத்துகின்றனர்.

பறவைக் காய்ச்சல் வைரஸ் எப்படி பரவுகிறது?

பறவைக் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ்களால் ஏற்படுகிறது, இதில் H5N1 போன்ற வகைகள் கோழிகளில் அதிக நோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை. இது பாதிக்கப்பட்ட பறவைகளின் உமிழ்நீர், சளி அல்லது கழிவுகளுடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. நோய்வாய்ப்பட்ட பறவைகளைக் கையாளும் பண்ணைத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் பறவைகளுடன் நீண்ட நேரம் தொடர்பில் இருக்கும்போது, மனிதர்களுக்கும் இந்த தொற்று ஏற்படலாம்.

சிக்கனில் இருந்து தொற்று ஏற்படும் அபாயம்?

கோழி இறைச்சியில் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் இல்லை. அதேசமயம், இந்த வைரஸ் முக்கியமாக பறவைகளின் சுவாச மற்றும் குடல் பாதைகளில் வாழ்கிறது. பாதிக்கப்பட்ட கோழிகளில் ஏதேனும் சிறிதளவு வைரஸ் இருந்தாலும், கோழியை 165 டிகிரி ஃபாரன்ஹீட் (74 டிகிரி செல்சியஸ்) உள் வெப்பநிலை வரை சமைப்பதால் அவை முழுமையாக அழிந்துவிடும்.

முட்டைகளிலிருந்து தொற்று ஏற்படும் அபாயம்?

பாதிக்கப்பட்ட கோழிகளின் முட்டை ஓடுகளில் அல்லது அரிதாக, அதன் உள்ளேயும் வைரஸ் இருக்கக்கூடும். அதனால், விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் முட்டைகளை கழுவுதல், ஆய்வு செய்தல் மற்றும் பேஸ்டுரைசேஷன் சோதனைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் அபாயத்தைக் குறைக்கலாம். முட்டையின் மஞ்சள் கருவை (165 டிகிரி பாரன்ஹீட்) நன்கு வேகவைப்பதன் மூலம் எந்த வைரஸூம் இறந்துவிடும், ஆய்வுகளும் இந்த வெப்பத்தில் எந்த உயிருள்ள வைரஸ்களும் உயிர்வாழாது என்பதைக் காட்டுகின்றன.

இதையும் படிக்க: பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு…தமிழக அரசு விடுத்த முக்கிய எச்சரிக்கை!

நன்றாக சமைக்கவும்:

பச்சைக் கோழி அல்லது லேசாக வேகவைத்த முட்டைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். முட்டை மற்றும் கோழிகளை நன்கு சமைப்பதன் மூலம் பறவைக் காய்ச்சல் வைரஸ் மற்றும் பொதுவான பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். பச்சைக் கோழி அல்லது முட்டைகளைக் கையாண்டால், 20 வினாடிகளுக்கு கைகளை நன்கு கழுவ வேண்டும்.