Male Infertility: ஆண்களிடையே அதிகரிக்கும் விந்தணு எண்ணிக்கை குறைபாடு.. இதை சரிசெய்வது எப்படி..?

Boost Sperm Count Naturally: குழந்தைப் பேறு என்பது ஒவ்வொரு தம்பதியினருக்கும் ஒரு பெரிய கனவு. ஆனால், சிலருக்கு இந்தக் கனவு நிறைவேறுவதில் சிரமம் ஏற்படலாம். குறைந்த விந்தணு எண்ணிக்கை இதற்கு ஒரு முக்கியக் காரணம். இந்தக் கட்டுரை, குறைந்த விந்தணு எண்ணிக்கைக்கான காரணங்கள், அதை எவ்வாறு இயற்கையாகவே அதிகரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

Male Infertility: ஆண்களிடையே அதிகரிக்கும் விந்தணு எண்ணிக்கை குறைபாடு.. இதை சரிசெய்வது எப்படி..?

விந்தணு குறைபாடு

Published: 

19 Aug 2025 12:00 PM

பெற்றோராக வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு தம்பதியினருக்கு உண்டாகும் மிகப்பெரிய கனவாகும். திருமணம் ஆன சில மாதங்களிலேயே பெண்கள் கருத்தரித்தல் குறித்து வீட்ல விசேஷமா என்று சொந்த காரர்கள் கேட்க தொடங்கிவிடுவார்கள். சில நேரங்களில் இந்த கனவு நிறைவேறுவதில் சிரமம் ஏற்படுவதால் தாமதம் ஆகிறது. பெற்றோராக ஒரு பெண்ணிற்கு எப்படி கருமுட்டை முக்கியமோ அதேபோல், ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை (Low Sperm Count) முக்கியமானது. இந்தநிலையில், குழந்தை (Child) பெற விந்தணு எண்ணிக்கை என்னவாக இருக்க வேண்டும், அது குறைவாக இருந்தால் என்ன செய்யலாம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

பெண்கள் குழந்தை பெற முடியாவிட்டால், அவர்களுக்கு குறைபாடு இருப்பதாக தெரிவிக்கும் இந்த சமூகம், ஆண்களுக்கும் குறை இருக்கும் என்பதை பற்றி நினைப்பது கிடையாது. பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யும், நேரத்தில் பல நேரங்களில் குடும்ப உறுப்பினர்கள் ஆண்களுக்கு பரிசோதனை செய்வது பற்றி நினைப்பது கிடையாது. அதன்படி, ஒரு குழந்தையை கருத்தரிப்பதில் விந்தணு எண்ணிக்கை மிக முக்கியமான விஷயம் ஆகும். ஒரு ஆரோக்கியமான ஆணின் விந்தணு எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டருக்கு குறைந்தது 15 மில்லியன் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை 15 மில்லியனுக்கும் குறைவாக இருந்தால், அது ‘குறைந்த விந்தணு எண்ணிக்கை’ என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, கருத்தரித்தலில் சிரமத்தை தருகிறது.

ALSO READ: கர்ப்ப காலத்தில் முதுகு வலி ஏற்பட காரணம் என்ன? தடுப்பது எப்படி..?

விந்தணு எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள்:

  • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை – புகைபிடித்தல், மது அருந்துதல், சமநிலையற்ற உணவு.
  • மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை
  • அதிக வெப்பம் – மடிக்கணினியை மடியில் வைத்திருத்தல், இறுக்கமான ஆடைகளை அணிதல்.
  • ஹார்மோன் சமநிலையின்மை
  • தொற்று அல்லது காயம்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

  1. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. அதன்படி பச்சை காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள் மற்றும் புரதங்கள் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
  2. தொடர்ந்து, யோகா மற்றும் நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
  3. மன அழுத்தத்தைக் குறைத்து கொள்வது முக்கியம். அதன்படி, உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தியானம் போன்றவற்றை கொண்டு அமைதியாக்கலாம்.
  4.  புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டுக்கொடுங்கள்.
  5. மருத்துவரின் ஆலோசனையின்படி துத்தநாகம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

ஒரு வருட வழக்கமான முயற்சிகளுக்குப் பிறகும் கர்ப்பம் ஏற்படவில்லை என்றால், இரு துணைவர்களும் கருவுறுதல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஆண்கள் தங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு இயக்கம் மற்றும் தரத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

ALSO READ: கங்காரு தாய் பராமரிப்பு என்றால் என்ன? இது தாய்- குழந்தையை எப்படி பிணைக்கும்..?

குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையை நிறைவேற்ற, உணர்ச்சி ரீதியான தயாரிப்பு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியமும் சமமாக முக்கியம். சரியான விந்தணு எண்ணிக்கை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவரின் சரியான நேரத்தில் ஆலோசனை மூலம், பெற்றோராக வேண்டும் என்ற கனவை எளிதில் நிறைவேற்ற முடியும்.