Pregnancy Sleep Positions: கர்ப்ப காலத்தில் எப்படி தூங்குவது குழந்தைக்கு நல்லது..? இடது பக்கம் தூங்குவது ஏன் நல்லது ?
Best Sleeping Positions for Pregnancy: கர்ப்ப காலத்தில் சரியான தூக்கம் தாய்க்கும் குழந்தைக்கும் மிகவும் முக்கியம். இடது பக்கம் படுத்து தூங்குவது இரத்த ஓட்டத்தையும், ஊட்டச்சத்தையும் மேம்படுத்துகிறது. வயிறு படும்படி அல்லது முதுகு படும்படி தூங்குவதை தவிர்க்க வேண்டும். தலையணைகள் உதவியுடன் இடது பக்க தூக்கத்தை மேம்படுத்தலாம்.

கர்ப்பம் (Pregnancy) என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் 2வது பிறப்பு என்றே சொல்லலாம். தாய் செய்யும் ஒவ்வொரு விஷயமும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது தாயிற்கு மட்டுமல்ல, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது, நடப்பது, ஓய்வெடுப்பது என அனைத்தையும் மிக கவனமாக செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான பெண்கள் தூங்கும் நிலையை (Sleep Positions) பற்றி கவலைப்படுவது கிடையாது. கர்ப்ப காலத்தில் தவறான நிலையில் தூங்குவது உங்கள் குழந்தையின் (Child Care) ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
கர்ப்ப காலத்தில் தவறான தூக்க நிலை குழந்தைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்தும். அந்தவகையில், எப்படி தூங்குவது சரியானது, என்ன செய்யக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கர்ப்ப காலத்தில் இந்த ஐந்து விஷயங்களை செய்யாதீங்க..! குழந்தைக்கு பிரச்சனையை தரும்!




தரையில் முதுகை வைத்து தூங்குவது பாதுகாப்பானதா..?
கர்ப்ப காலத்தின்போது கர்ப்பிணிகள் 2வது மற்றும் 3வது 3 மாத காலங்களில் தரையில் முதுகு படும்படி தூங்குவது தவறானது. இப்படி, தூங்கும்போது வயிற்றில் இருக்கும் குழந்தையும் எடையானது உடலின் முக்கிய நரம்புகள் மற்றும் இரத்த தமனிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது இரத்த ஓட்டத்தை பாதிக்க செய்யும். இது குழந்தைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை உண்டாக்கும்.
வயிறு படும்படி தூங்கலாமா..?
கர்ப்ப காலத்தின் தொடக்கத்தின்போது அதாவது முதல் 3 மாதங்களில் சில பெண்கள் தரையில் வயிற்றை அழுத்தியபடி தூங்குவார்கள். ஆனால், வயிறு வளரும்போது, இந்த நிலை மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும். இது வயிற்றில் நேரடி அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது குழந்தையின் வளர்ச்சியை தடுக்கலாம்.
இடது பக்கம் தூங்குவது ஏன் நல்லது..?
கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான மற்றும் மிகவும் நன்மை பயக்கும் தூக்க நிலை இடது பக்கத்தில் தூங்குவதுதான். இது கருப்பைக்கு போதுமான இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும். மேலும், இப்படி தூங்கும்போது சிறுநீரகங்களும் சிறப்பாக செயல்படும். இப்படி தூங்குவதுதான் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நன்மை பயக்கும்.
தலையணைகளை பயன்படுத்தலாம்:
இடது பக்கம் தொடர்ந்து தூங்குவது கடினமாக இருந்தால், தலையணைகளின் உதவியை நாடலாம். கால்களுக்கு இடையில் மற்றும் வயிற்றுக்குக் கீழே ஒரு தலையணையை வைப்பதன் மூலம் சிறிது தூக்கநிலை கிடைக்கும். சரியான நிலையை பராமரிக்க உதவும் கர்ப்ப கால தலையணைகள் கடைகள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கிறது.
ALSO READ: கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்..? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
தூங்கும்போது ஒரு சில நிமிடங்கள் திரும்பி படுக்கலாம்:
இரவு முழுவதும் யாராக இருந்தாலும் ஒரே நிலையில் தூங்குவது என்பது கடினமான விஷயம்தான். அதற்காக, கர்ப்பிணிப் பெண்கள் இரவு முழுவதும் ஒரே நிலையில் தூங்க வேண்டிய அவசியமில்லை. தூக்கத்தின்போது வலது பக்கமாக மாறினால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சிறிது நேரம் வலது புறம் படுத்தபிறகு, மீண்டும் இடது பக்கத்தில் படுத்து கொள்வது நல்லது.