Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pregnancy Fever: கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்..? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

Fever During Pregnancy: கர்ப்ப காலத்தில் காய்ச்சல் பொதுவானது, ஆனால் ஆபத்தானது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. நிறைய திரவங்களை குடிக்கவும், ஓய்வெடுக்கவும். பாராசிட்டமால் மட்டுமே மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம். இந்த நேரத்தில், உங்கள் ஆரோக்கியம் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

Pregnancy Fever: கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்..? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
கர்ப்ப காய்ச்சல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jul 2025 15:05 PM IST

கர்ப்ப காலத்தில் (Pregnancy) கர்ப்பிணி தனது உடல்நலத்திலும், வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இந்தநேரத்தில், கர்ப்பிணி பெண்ணுக்கு காய்ச்சல் (Fever) வந்தால் என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது என்பது பலருக்கும் தெரியவதில்லை. பலரும் மருத்துவரின் ஆலோசனை இன்றி மெடிக்கல் கடைகளில் மருந்து வாங்கி எடுத்து கொள்கிறார்கள். யோசிக்காமல் இப்படியான மருந்துகளை எடுத்துகொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆபத்தை தரும். எனவே, கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் இந்த ஐந்து விஷயங்களை செய்யாதீங்க..! குழந்தைக்கு பிரச்சனையை தரும்!

கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்..?

  • கர்ப்பமாக இருக்கும்போது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி சற்று பலவீனமடையும். இதனால், சளி மற்றும் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன்படி, முதலில் காய்ச்சல் வந்தால், மருத்துவரை அணுகாமல் எந்தவொரு மருந்தையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இது மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று.
  • முடிந்தவரை, உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இது காய்ச்சல் வராமல் உங்களை பாதுகாக்கும். எனவே, தண்ணீர், ஜூஸ் மற்றும் சூப் எடுத்துக்கொள்ளலாம்.
  • கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகளவில் ஓய்வு எடுப்பது முக்கியம். எனவே, போதுமான அளவு தூக்கம், ஓய்வு போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து, காய்ச்சல் அதிகமாக இருந்தால், நெற்றியில் நீர் கொண்டு வைத்து எடுக்கலாம்.
  • கர்ப்ப காலத்தில் காய்ச்சலை குறைப்பதற்கான மருந்து அசெட்டமினோஃபென் ஆகும். அதாவது, இது நமக்கு தெரிந்த பாராசிட்டமால் என்று அழைக்கப்படுகிறது. இந்த மருந்து உடல் வெப்ப நிலையை குறைக்கும், குழந்தைக்கு பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:

  1. மருத்துவரை அணுகாமல் ஒருபோதும் எந்தவொரு மருந்தையும் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. முறையான பரிசோதனைக்குப் பிறகும் மருத்துவரின் மேற்பார்வையிலும் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  2. இப்யூபுரூஃபன், ஆஸ்பிரின் அல்லது பிற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDகள்) போன்ற மருந்துகள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானதாகக் கருதப்படுவதில்லை, மேலும் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது பாதுகாப்பானதா..? இல்லையா..?

எப்போது மருத்துவரைப் பார்ப்பது அவசியம்?

  • கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படும். இருப்பினும், காய்ச்சல் 100.4°F (38°C) ஐ விட அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.
  • காய்ச்சலுடன் உடல் வலி, சுவாசிப்பதில் சிரமம், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில் காய்ச்சலைப் புறக்கணிக்காதீர்கள். சரியான நேரத்தில் மருத்துவரை அணுகிய பின்னரே மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம்.